அக்டோபர் 2026 வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம்
தேசிய விடுமுறையான காந்தி ஜெயந்தியைத் தவிர்த்து, பிற விடுமுறைகள் அந்தந்த பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்பப் பின்வருமாறு அளிக்கப்படுகின்றன:
அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி): நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
அக்டோபர் 10 (மகாலய அமாவாசை): பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் விடுமுறை.
அக்டோபர் 17 (மகா சப்தமி): அகர்தலாவில் மட்டும் விடுமுறை.
அக்டோபர் 19 (ஆயுத பூஜை / துர்கா பூஜை / மகா நவமி): சென்னை, அகர்தலா, ஐசால், புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் வங்கிகள் இயங்காது.
அக்டோபர் 20 (விஜயதசமி / தசரா): கேங்டாக் மற்றும் இம்பால் தவிர இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் விடுமுறை.
அக்டோபர் 21 (விஜயதசமி / துர்கா பூஜை): சென்னைக்கு அடுத்தபடியாக கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, அகர்தலா, கேங்டாக், கவுகாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் விடுமுறை.
அக்டோபர் 22 & 23 (துர்கா பூஜை / தசாய்ன்): கேங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
அக்டோபர் 26 (லக்ஷ்மி பூஜை / மகரிஷி வால்மீகி ஜெயந்தி): அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை.
அக்டோபர் 29 (கர்வா சௌத்): சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அக்டோபர் 31 (சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி): அகமதாபாத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.வாராந்திர விடுமுறைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
பண்டிகை கால விடுமுறைகள் தவிர்த்து, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வழக்கம்போல் வங்கிகள் இயங்காது.
நேரடி வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளைச் செய்ய ஆன்லைன் பேங்கிங் (Online Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) மற்றும் ஏடிஎம் (ATM) சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பக் கோளாறுகள் தவிர மற்ற நேரங்களில் இந்த டிஜிட்டல் சேவைகள் தடையின்றிச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

