• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கராச்சியில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்.. 359 பயணிகளை காத்து உயிரைவிட்ட நீர்ஜா பானோட்.. தியாக பெண் | Who is Neerja Bhanot? How did she saves 359 lives in Karachi Pan AM flight hijack? details here

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கராச்சியில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்.. 359 பயணிகளை காத்து உயிரைவிட்ட நீர்ஜா பானோட்.. தியாக பெண் | Who is Neerja Bhanot? How did she saves 359 lives in Karachi Pan AM flight hijack? details here
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Thursday, October 1, 2026, 19:24 [IST]

சென்னை: 1986 செப்டம்பர் 5.. அதிகாலை 6 மணி.. சூரியன் உதிக்க ரெடியான சமயம் அது. மும்பையில் புறப்பட்ட அமெரிக்க விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி மீண்டும் புறப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. 379 பேர் பயணித்த அந்த விமானம் துப்பாக்கி ஏந்திய 4 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. 17 மணிநேர போராடி உயிர் தானே போனால் போகட்டும் என துணிச்சல்மிக்க 22 வயது இந்திய இளம்பெண் தன் உயிரை கொடுத்து 359 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் பற்றி இங்கு பார்க்கலாம்.

நேற்றைய தினம் ‘ஃப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 என்ற விமானம் துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்கு புறப்பட்டது. இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு ஓமன் நாட்டு பைலட் விமானத்தை கடத்தி 180 பேரையும் கொல்ல முயன்றதாக ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Neerja Bhanot

அதிர்ஷ்டவசமாக இந்திய கேப்டன் பைலட் ஸ்மித் மச்சார் உயிருக்கு போராடியபோதும் காக்பிட்டை திறந்ததால் பயணிகள் வந்து ஓமன் துணை விமானியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பணி முடித்து விமானத்தில் இருந்த 2 விமானிகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணித்த 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை ஹீரோ என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என அனைவரும் பராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தான் பாகிஸ்தான் கராச்சி நகரில் 4 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மும்பை – நியூயார்க் விமானத்தை இந்திய விமானப்பெண் சாதுர்யமாக செயல்பட்டு தன் உயிரை தியாகம் செய்து 359 பேரின் உயிர்களை காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் பற்றிய விவரங்கள் அனைவரலாலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எப்போது? எப்படி நடந்தது? துணிச்சலான அந்த விமான பணிப்பெண் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்த திக்திக் சம்பவம் பற்றி அறிய நாம் சரியாக 40 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஆம் 1986ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தான் இந்த சம்பவம் நடந்தது. அன்றைய தினம் அமெரிக்காவின் ‘பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ்’ என்ற நிறுவனத்தின் பான் ஏஎம் 73 என்ற விமானம் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு புறப்பட்டது.

இது போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானமாகும். பாகிஸ்தானின் கராச்சி (இப்போது ஜின்னா சர்வதேச விமான நிலையம்) மற்றும் ஜெர்மனியின் ஃப்ரங்புட் ஆகிய நகரங்கள் வழியாக நியூயார்க் நகரை இந்த விமானம் சென்றடையும். விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் என மொத்தம் 379 பேர் பயணித்தனர்.

180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த 'டிவி ஷோ’

180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’

மும்பையில் புறப்பட்ட விமானம் விமானம் கராச்சியை சென்றடையும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.
கராச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது. விமானத்தில் இருந்து சில பயணிகள் இறங்கினர். விமானத்தில் சில பயணிகள் ஏறினர். இந்த சமயத்தில் பாகிஸ்தான் விமான நிலைய பாதுகாவலர்கள் போர்வையில் 4 பயங்கரவாதிகள் திபுதிபுவென நுழைந்தனர். விமானத்தில் ஏறியதும் அவர்கள் துப்பாக்கியை காண்பித்து பயணிகளை மிரட்ட தொடங்கினர்.

இவர்கள் பாலஸ்தீனத்தின் ‘அபு நிடால்’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஆவார்கள். ஆயுதமேந்தி விமானத்தை கடத்த வந்திருந்த பயங்கரவாதிகளை பார்த்து பதறித்தான் போனார்கள் பயணிகள். அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது சீனியர் விமான பணிப்பெண்ணாக 22 வயது நிரம்பிய சண்டிகரை சேர்ந்த நீர்ஜா பானோட் இருந்தார். அவருக்கு 2 நாளில் பிறந்தநாள் வர இருந்தது.

பயணிகள், விமான பணிப்பெண்கள் அனைவரும் பதற்றமான நிலையில் நீர்ஜா பானோட் சமயோசிதமாக யோசித்தார். எப்படியாவது விமான கடத்தலை தடுக்க வேண்டும் என்று நினைத்தார். 4 பயங்கரவாதிகளுக்கும் விமானம் ஓட்ட தெரியாது. இதனால் முதலில் விமானிகளை விமானத்தில் இருந்து வெளியேற செய்ய வேண்டும்என நினைத்தார். விமானம் கடத்தல் தொடர்பாக விமானிகளுக்கு தகவல் அனுப்பினார். இதனால் காக்பிட்டில் இருந்த 2 விமானிகள், பொறியாளர் என மூவரும் உடனடியாக விமானத்தை விட்டு இறங்கி ஓடிப்போயினர்.

இதனால் விமானத்தை இயக்க யாரும் இல்லை. விமானம் கராச்சி விமான நிலையத்திலேயே நின்றது.விமானத்தில் பைலட் இல்லை. விமானத்தை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியாது என்று அறிந்த கடத்தல்காரர்கள் அமெரிக்கர்களை குறிவைத்து கொல்ல முடிவு செய்தனர். பயணிகளின் அனைத்து பாஸ்போர்ட்டையும் விமான குழு, பயணிகளிடம் கேட்டனர். அமெரிக்கர்கள் தான் அவர்களின் டார்க்கெட் என்று அறிந்தவுடன் விமான பணிப்பெண் நீர்ஜா பானோட் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களிடம் சிக்னல் காண்பித்தார். பாஸ்போர்ட்டுகளை இருக்கையின் அடியிலும், குப்பை தொட்டியிலும் மறைத்து வைக்க சிக்னல் செய்தார். இதனால் அமெரிக்கர்கள் யார்? என்பதை அறிய முடியாமல் பயங்கரவாதிகள் திணறினர்.

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் - பதற்றம்

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம்

மேலும் நீர்ஜா பானோட், கடத்தல்காரர்களை சமாதானம் செய்தார். பயணிகளை கழிவறை பயன்படுத்த அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார். குழந்தைகளை தண்ணீர் குடிக்கவும் அனுமதி கேட்டு அதனை நிறைவேற்றினார். 17 மணிநேரம் இப்படியே கடந்தது. விமானம் கராச்சி விமான நிலையத்திலேயே நின்றது. திக்திக் மனநிலையில் பயணிகள் இருந்த இடத்திலேயே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் விமானத்தில் விளக்குகள் அணைந்தன. விமானத்தின் உள்ளே இருள் சூழ்ந்தன. உடனடியாக நீரோஜ் பானோட் அவசர கதவை திறந்து பயணிகளை அவசரஅவசரமாக வெளியேற்றினர். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என நினைத்த கடத்தல்காரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கையெறி குண்டுகளை வீசினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். துயரம் என்னவென்றால் 3 அமெரிக்க குழந்தைகளை காப்பாற்ற முயன்ற நீர்ஜா பானோட்டின் உடலையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவரது உயிர் பிரிந்தது.

நீர்ஜா பானோட் நினைத்து இருந்தால் எமர்ஜென்சி கதவை திறந்தபோது முதல் ஆளாக வெளியேறி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை. பயணிகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று இறுதி வரை போராடி உயிர் நீத்தார்.

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 17 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 359 பேர் மீட்கப்பட்டனர். நீர்ஜா பானோட்டின் இந்த துணிச்சல் மிக்க செயலை பாராட்டி நம் நாட்டின் உயரிய வீரதீர செயல் விருதான அசோக சக்கரா வழங்கப்பட்டது. இந்த விருது அவரது மரணத்துக்கு பிறகு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் பெண்மணியாக நீர்ஜா பானோட் தான். பிறகு 1987 ல் பாகிஸ்தான் நீரோஜ் பானோட்டுக்கு தம்கா இ பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிதத்தது. அமெரிக்க நீதித்துறையும் 006ல் நீரோஜ் பானோட்டுக்கு வீரதீர விருது (Special Courage Award) விருது வழங்கி கவுரவித்தது.

நீர்ஜா பானோட் மற்றும் துபாய் – டெல் அவிவ் விமானத்தின் பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் ஆகியோரின் செயல்களை ஒப்பிட முடியாது என்றாலும் பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளின் உயிரை காக்க இந்திய விமான பணியாளர்களாக இருவரும் துணிந்து செயல்பட்டதை நம்மால் மறுக்க முடியாது என்பதை இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

English summary

Neerja Bhanot, a flight attendant, risked her life to save 359 passengers on a hijacked plane in Karachi, Pakistan. Who was Neerja Bhanot? Here are the details of her heroic act.

Read More

Previous Post

நடுவானில் சினிமா காட்சிபோல் நடந்த பரபரப்பு சம்பவம்: விமானி அறைக்குள் நடந்தது என்ன?

Next Post

மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)

மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin