நாடாளுமன்றத்தின் நான்கு உதவிப் பணிப்பாளர்களும் (நிர்வாகம்) 18 சிரேஷ்ட அதிகாரிகளும் நாடாளுமன்றத்தின் பிற துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் இன்று (01.09.2026) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சமீப காலங்களில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமதி குஷானி ரோகனதீர
இடம்பெயர்வு செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர்கள் உமங்க பண்டித, பி. எச். குமாரசிங்க, எச். ஏ. டி. டி. ஹெவாரச்சி, பி. கே. டி. எஸ். டபிள்யூ. விஜயகுணவர்தன ஆவர்.

இந்த இடமாற்றங்களை நாடாளுமன்றத்தின் நாயகம் மற்றும் சட்டத்தரணியான திருமதி குஷானி ரோகனதீர மேற்கொண்டுள்ளார்.
z
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

