India
oi-Nantha Kumar R
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 34 சதவீதமாக அதிகரித்ததை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக இருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கான இடஒதுக்கீடு அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி கிராமப்புற உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 34 சதவீதமாகவும், நகர்புற உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 33.33 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 2 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடுகள் அதிரடியாக ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மொத்த இடஒதுக்கீடு 59 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க கூடாது. ஆனால் இந்த அரசாணை என்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறுவதாக உள்ளது கூறிய உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக ஆந்திர அரசு பிறப்பித்த 2 அரசாணைகளையும் ரத்து செய்வதாக அதிரடியாக உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி தேர்தல் பணிகள் 6 மாதத்தில் தொடங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் பிற்படுத்தபப்டடோர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்திய பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

