• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி? | Dubai – Tel Aviv flight: How did Indian captain Smit Machchhar open the cockpit its leads to safe 180 pilots?

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி? | Dubai – Tel Aviv flight: How did Indian captain Smit Machchhar open the cockpit its leads to safe 180 pilots?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Thursday, October 1, 2026, 10:32 [IST]

டெல்அவிவ்: துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் பயணித்த நிலையில் ஓமன் நாட்டின் துணை விமானி இந்திய பைலட்டான கேப்டனை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார். ஆனாலும் இந்த விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு 180 பேரும் உயிர் தப்பினார். இந்நிலையி் தான் தான் இறந்தாலும் விமானத்தில் பயணிக்கும் 180 பேரும் உயிர் தப்பிக்க வேண்டும் என்று இந்திய விமானி ஸ்மித் மச்சார் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

dubai-tel-aviv-flight-how-did-indian-captain-smit-machchhar-open-the-cockpit-its-leads-to-safe-18

துபாயில் இருந்து நேற்று இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு ‘ஃப்ளைதுபாய் FZ1073’ என்ற விமானம் சென்றது. இந்த விமானத்தை இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சா மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் ஆகியோர் ஓட்டினர். ஓமன் பைலட் துணை விமானியாக செயல்பட்டார்.

இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஓமன் நாட்டின் துணை விமானி கத்தியை எடுத்து இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாவை குத்தினார். இதனை இந்திய பைலட் ஸ்மித் மசசா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்மித் மச்சா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தின் உயரம் திடீரென்று மளமளவென சரிந்தது. விமானம் குலுங்கியதால் பயணிகள் அலற தொடங்கினர். ஓமன் நாட்டு துணை விமானி விமானத்தை கடத்தி தரையில் மோதி அனைவரையும் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காக்பிட் கதவை திறந்து கொண்டு இஸ்ரேல் நாட்டின் யனிவ் ஹாயூன் உள்பட 2 பேர் நுழைந்தனர். இவர்கள் கத்திக்குத்து காயமடைந்த ஸ்மித் மச்சாவை மீட்டனர். அதோடு துணை விமானியின் கழு்தை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். பிறகு அந்த விமானத்தில் பணி முடித்து பயணித்த 2 விமானிகள் விமானத்தை ஓட்டி சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

இதனால் விமானத்தில் பயணித்த 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் உயிர் தப்பினர். இதில் 27 பேர் குழந்தைகள் ஆவார்கள். தற்போது இந்திய பைலட் ஸ்மித் மச்சாவிற்கு சவுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் ஓமன் துணை விமானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாவின் நெகிழ வைக்கும் செயல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

காக்பிட்டில் ஓமன் துணை விமானி தன்னை கத்தியால் குத்தினாலும் ஸ்மித் மச்சா கலங்கவில்லை. ரத்தம் கொட்டிய நிலையிலும் விமானத்தின கட்டுப்பாட்டை விடவில்லை. எந்த காரணம் கொண்டும் ஓமன் துணை விமானியால் விமானத்திற்கும், விமான பயணிகளுக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தொடர்ந்து துணை விமானியை எதிர்த்து சண்டையிட்டார். விமானத்தின் கட்டுப்பாட்டை தன்னிடமே வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். காக்பிட் கதவின் அருகே அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதையடுத்து ஓமன் விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயன்றார். அப்போது தான் காக்பிட் கதவை திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. வெளியில் இருந்து பயணிகள் காக்பிட் கதவை திறக்க முயற்சிப்பதை இந்திய பைலட் ஸ்மித் மச்சா உணர்ந்தார். ஓமன் துணை விமானி விமானத்தை கடத்தும் செயலில் தீவிரமாக கவனம் செலுத்தியதால் ஸ்மித் மச்சா மெதுவாக நகர்ந்து காக்பிட் கதவை திறந்தார். இதையடுத்து தான் இஸ்ரேல் பயணி யனிவ் ஹாயூன் உள்பட 2 பேர் சென்று ஓமன் துணை விமானியை வெளியே இழுத்து வந்து அசம்பாவிதத்தை தடுத்தனர். பிறகு பணி முடித்து பயணித்த மற்ற 2 விமானிகள் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கியது தெரியவந்துள்ளது.

இப்படி இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் தான் 180 பேரின் உயிரை காப்பாற்ற முடிந்தது. இதனால் தான் ஸ்மித் மச்சாவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி உள்பட அனைவரும் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.

English summary

Dubai – Tel Aviv Flight: During a flight from Dubai to Israel carrying 180 passengers, the Omani co-pilot attempted to hijack the plane by stabbing the Indian captain with a knife. Despite this, the aircraft landed safely, and all 180 people survived. The actions of the Indian pilot, Smith Machar-who opened the cockpit door with the resolve that the 180 passengers must survive even if he were to lose his life-have deeply moved everyone.

Read More

Previous Post

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..? | Man Became Kotak Bank CEO Within 9 Months of Joining: Who Is Anup Kumar Saha?

Next Post
கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..? | Man Became Kotak Bank CEO Within 9 Months of Joining: Who Is Anup Kumar Saha?

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..? | Man Became Kotak Bank CEO Within 9 Months of Joining: Who Is Anup Kumar Saha?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin