• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!! | Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!! | Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் கொண்ட சந்தை தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் மியூச்சுவல் பண்ட் வாயிலாகவும் பல கோடி போர் பங்குச்சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஏன்..?

சென்செக்ஸ் குறியீடு 2026ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 வரையில் சுமார் 12,708 புள்ளிகள் சரிந்து 14.92 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 3526.10 புள்ளிகள் சரிந்து 13.49 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. இந்த மோசமான சரிவுக்கு அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருவாய் முக்கியமான காரணமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?

பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட  காரணமாக இருக்கலாம்..!!

2 ஆண்டுகளுக்கு முன்பு Nifty 50 குறியீட்டில் நீங்கள் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீட்டின் மதிப்பு தற்போது ரூ.88 லட்சமாகக் குறைந்திருக்கும்.

ஆனால் இதே ரூ.1 கோடி பணத்தை அமெரிக்காவின் S&P 500 குறியீட்டில் முதலீடு செய்திருந்தால் ரூ.1.35 கோடியாக உயர்ந்திருக்கும். இதுவே ஜெர்மனியின் DAX குறியீட்டில் முதலீடு செய்திருந்தால் ரூ.1.30 கோடியாகவும், ஜப்பானின் Nikkei குறியீட்டில் முதலீடு செய்திருந்தால் ரூ.1.50 கோடியாகவும், தைவான் சந்தையில் முதலீடு செய்திருந்தால் ரூ.2 கோடிக்கும் அதிகமாகவும் உயர்ந்திருக்கும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கத்தை இதில் கணக்கிடப்படவில்லை. இதையும் சேர்த்தால் 2.5 கோடி ரூபாய் வரையிலான லாபம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

கடந்த 2 வருடத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 84.03 ரூபாயில் இருந்து 95.81 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு சுமார் 14.07 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அரசின் பத்திரங்களின் வட்டி வருவாய் இந்தியப் பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

அமெரிக்க அரசின் 10 ஆண்டு பத்திரங்களுக்கு 5 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி வருமானம் கிடைத்தால் உலகளவில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் அதிக ரிஸ்க் அதிக தடுமாற்றம் கொண்ட பங்குச்சந்தை முதலீடுகளை விடுத்து பாதுகாப்பான நிலையான வருமானம் தரும் அமெரிக்க அரசு பத்திரங்கள் முதலீடுகள் செய்வார்கள். இதுதான் தற்போது நடக்கிறது.

தற்போது அமெரிக்காவின் 10 ஆண்டு அரசு பத்திர முதலீட்டுக்கு 5.29 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது. இது 2007ஆம் ஆண்டுக்குப் பின்பு கிடைக்கும் அதிகப்படியான வருமானமாகும். இத்தகைய வாய்ப்பு மிகவும் அரியது என்பதால் இந்தியா போன்ற வளரும் சந்தையில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பத்திர சந்தையில் முதலீடு செய்வதால் இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்திய சந்தையில் இருந்து முதலீடு வெளியேற இது மட்டும் காரணமில்லை, இந்தியப் பொருளாதாரம் தற்போது ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எல் நினோ மூலம் உணவுப் பொருட்கள் விலை உயர்வு எனப் பணவீக்கத்தால் பெரும் தாக்கம் எதிர்கொண்டு வருகிறது.

இதுப்போக வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்க்க ஏஐ தொழில்நுட்பத்தில் எவ்விதமான பெரிய வர்த்தகம் உருவாக்கப்படவில்லை. இதுமட்டுமா ரூபாய் மதிப்பு சரிவு, குறைவான R&D முதலீடுகள், மக்களின் வருமானத்தில் பெரிய அளவிலான உயர்வு இல்லாமல் இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து வருகிறது.

அமெரிக்கா 100 சதவீதம் வரி விதிக்கும் மிரட்டலால் ஏற்றுமதி பிரிவிலும் பெரிய அளவிலா முதலீடுகள் இல்லாமல் மிகவும் இக்காட்டான நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டு உள்ளதை உணர்ந்து தொடர்ந்து பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் இந்தியப் பத்திர சந்தையிலும், முதலீட்டுச் சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டைத் தக்க வைக்க இந்திய ரிசர்வ் வங்கி இந்த வருடத்தின் இறுதிக்குள் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor

Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor — பங்குசந்தையில் முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Story first published: Wednesday, September 30, 2026, 21:34 [IST]

Read More

Previous Post

ரயில்வே விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அசல் அடையாளச் சான்று கட்டாயம் தேவை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அமைச்சரவை, புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) தற்போதைக்கு விலக்கு அளித்துள்ளது – Malaysiakini

Next Post

அமைச்சரவை, புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) தற்போதைக்கு விலக்கு அளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin