Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக சார்பில், அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர். மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருமாவளவன் பேசியுள்ளார்.
இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில் உரையாற்றினேன். எனது உரையின் இறுதியில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா கூட்டணியைக் கேட்டுக்கொண்டேன்.
INDIA கூட்டணி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்: குற்றஞ்சாட்டப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோர வேண்டும். தற்போது நடைபெற்று வரும் SIR நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோர வேண்டும்.
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில் உரையாற்றினேன். எனது உரையின் இறுதியில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா கூட்டணியைக் கேட்டுக்கொண்டேன்.
INDIA கூட்டணி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:
1.… pic.twitter.com/c40RI6yLtw
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 30, 2026
பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சமூகவாரியான விவரங்களை வெளியிடக் கோர வேண்டும். நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோர வேண்டும்.
வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக்கக் கோர வேண்டும். ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கோர வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐ திரும்பப் பெறக் கோர வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.


