• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

12,000 ரன்கள்.. சச்சின், விராட் கோலி வரிசையில் இணைந்த ஹிட்மேன்.. ரோகித் சர்மாவின் சம்பவம்! | Rohit Sharma: Rohit Sharma becomes the 3rd Indian batsmen to Score 12,000 Runs in ODI Cricket

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
12,000 ரன்கள்.. சச்சின், விராட் கோலி வரிசையில் இணைந்த ஹிட்மேன்.. ரோகித் சர்மாவின் சம்பவம்! | Rohit Sharma: Rohit Sharma becomes the 3rd Indian batsmen to Score 12,000 Runs in ODI Cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, September 30, 2026, 20:51 [IST]

கவுகாத்தி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 73 ரன்களை எடுத்ததன் மூலமாக இந்த சாதனையை ரோகித் சர்மா செய்துள்ளார். இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது வீரராக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது.

Rohit Sharma

406 ரன்கள் என்ற இலக்கு என்பதால், இருவருமே தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காமல், அதே வேகத்தில் சதத்தையும் விளாசினார். 72 பந்துகளில் சதம் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 35வது சதத்தையும் விளாசினார்.

அதுமட்டுமல்லாமல் 2 புதிய சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களையும் எட்டினார். இந்தப் போட்டியில் 73 ரன்களை எட்டிய போது ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்,.

இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். அதேபோல் விராட் கோலி 242 இன்னிங்ஸில் 12 ஆயிரம் ரன்களை குவித்திருந்த நிலையில், ரோகித் சர்மா 282 இன்னிங்ஸில் 12 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இதன் மூலமாக அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை விளாசிய 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். லார்ட்ஸ் ஒருநாள் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த ரோகித் சர்மா, தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சதம் அடித்திருப்பது கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தரமான ஃபார்மில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

English summary

Rohit Sharma: Rohit Sharma becomes the 3rd Indian batsmen to Score 12,000 Runs in ODI Cricket

Read More

Previous Post

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு வழக்கு ! எதிராளி சார்பில் முன்னிலையான தயாசிறி

Next Post

தூள்கிளப்பும் BPCL, IOCL பங்குகள்.. சவுதி அரேபியாவில் அடித்த மணி இந்தியாவில் கொண்டாட்டம்! | Saudi Arabia Restores Yanbu Port Oil Supply: BPCL, IOCL, HPCL Stocks Surge 3% as Crude oil price Eases

Next Post
தூள்கிளப்பும் BPCL, IOCL பங்குகள்.. சவுதி அரேபியாவில் அடித்த மணி இந்தியாவில் கொண்டாட்டம்! | Saudi Arabia Restores Yanbu Port Oil Supply: BPCL, IOCL, HPCL Stocks Surge 3% as Crude oil price Eases

தூள்கிளப்பும் BPCL, IOCL பங்குகள்.. சவுதி அரேபியாவில் அடித்த மணி இந்தியாவில் கொண்டாட்டம்! | Saudi Arabia Restores Yanbu Port Oil Supply: BPCL, IOCL, HPCL Stocks Surge 3% as Crude oil price Eases

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin