தூள்கிளப்பும் BPCL, IOCL பங்குகள்.. சவுதி அரேபியாவில் அடித்த மணி இந்தியாவில் கொண்டாட்டம்!
இந்தியா கச்சா எண்ணெய் சந்தை தொடர்ப்புடை நிறுவனங்கள் கடந்த ஒரு வாரமாக பெரும் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சவுதி அரேபியா.
ஹவுதி படைகளால் அந்நாட்டின் கிழக்கு மேற்கு பைப்லைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி பெரும் சேதம் உருவாக்கப்பட்ட நிலையில் வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு எண்ணெய் விலை உயரத் துவங்கியது.

இதனால் பெரும்பாலான எண்ணெய் தொடர்புடைய நிறுவனப் பங்குகள் சரிந்தது, நேற்றைய வர்த்தகத்தில் கூட 2.5 சதவீதம் வரையிலான சரிவு பதிவானது. தற்போது சவுதி அரேபிய அரசு பைப்லைன் பாதிப்புகளைச் சரி செய்து மேற்கு பகுதியில் இருக்கும் யான்பு துறைமுகத்தில் இருந்து செங்கடல் வாயிலாகச் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் சப்ளையை போருக்கு முந்தைய நிலையை எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த ஒரு விஷயம் மூலம் சர்வதேசச் சந்தையில் சப்ளை மீண்டும் நிலைப்பெற்றுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைய துவங்கியுள்ளது, இதனால் இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், கெயில் ஆகியவற்றின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் பெட்ரோநெட், இந்திரபிரஸ்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ஓன்ஜிசி, ஆயில் இந்தியா போன்ற சரிவைச் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவால் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாப அளவுகள் அதிகரிக்கும் என்பதால் இப்பிரிவு நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது.
இன்று கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் உயர்ந்து 103 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் உயர்ந்து 90.28 டாலராக உள்ளது.
ஈரான் போர் முடிவுக்கு வந்து, கச்சா எண்ணெய் சப்ளை போருக்கு முந்தைய அளவுக்குத் திரும்பினால் ஒரு பேரல் 88 முதல் 72 டாலர் வரையில் குறையலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இந்த விலை நிலை அடைவதற்குக் கச்சா எண்ணெய் விலை 2028 ஆம் ஆண்டு வரையில் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஈரான் போர் முடிக்க அமெரிக்காவில் மத்தியஸ்தர் நாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த காரணத்தால் அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் முடிந்த பின்பு ஈரான் மீது பெரும் போர் தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
