• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஸ்டாலின், அகிலேஷ், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் எல்லாம் எங்கே? ஆயிரம் துண்டுகளாக இந்தியா கூட்டணி” – சிவராஜ் சிங் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஸ்டாலின், அகிலேஷ், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் எல்லாம் எங்கே? ஆயிரம் துண்டுகளாக இந்தியா கூட்டணி” – சிவராஜ் சிங் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 6:38 PM IST

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தியா கூட்டணி சிதைந்துவிட்டதாக விமர்சித்தார். ஸ்டாலின், அகிலேஷ், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கூட்டத்தில் இல்லை என்றார்.

News18
News18

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், “இன்று இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்தக் கூட்டணி சிதைந்துவிட்டது. அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் எங்கே? காங்கிரஸ் இருக்கும் இடத்தில் தாங்கள் அமரவே மாட்டோம் என்று கூறும் அளவுக்கு திமுக சென்றுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே? ஹேமந்த் சோரன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு இதயம் ஆயிரம் துண்டுகளாக உடைந்து, ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் போல இந்தியா கூட்டணியின் நிலைமை இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்டோபர் 2 முதல் 8 வரை ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்’ என்ற பெயரில் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கருத்து தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், ”தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த பிறகு, காங்கிரஸ் கட்சி தனது தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு சுயபரிசோதனை செய்துகொள்ளும் என்று நாடு எதிர்பார்த்தது. ஆனால், தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்ற முடிவையே காங்கிரஸ் எடுத்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கேவோ அல்லது ராகுல் காந்தியாக இருக்கட்டும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது, பொய்களைச் சொல்வது மற்றும் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆகியவற்றிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்தக் கூட்டணி சிதைந்துவிட்டது. தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் எங்கே? ஸ்டாலின் எங்கே? காங்கிரஸ் இருக்கும் இடத்தில் தாங்கள் அமரவே மாட்டோம் என்று கூறும் அளவுக்கு திமுக சென்றுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே? உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாகவே இணைந்தார். ஹேமந்த் சோரன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு இதயம் ஆயிரம் துண்டுகளாக உடைந்து, ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் போல இந்தியா கூட்டணியின் நிலைமை இருக்கிறது.

உண்மை என்னவென்றால், ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூட இந்தியா கூட்டணி தயாராக இல்லை. அவர்கள் தங்களை மீண்டும் ஒருமுறை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தியா கூட்டணி ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்கவில்லை. அதுமட்டுமா, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில்கூட ராகுல் காந்தி ‘என்னை நம்புங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதாவது, காங்கிரஸுக்கே கூட ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்.

அக்டோபர் 2 முதல் 8 வரை ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்’ என்ற பெயரில் ஒரு பேரணியை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இது ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கானது அல்ல, மாறாக ‘குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான’ பேரணி. இருப்பினும், வாரிசு அரசியல் இனி எடுபடாது என்று மக்கள் உறுதியாக முடிவு செய்துவிட்டனர்.

வங்காளத் தேர்தலுக்கு முன்னதாக, மம்தா பானர்ஜியின் தவறுகளால்தான் அங்கு பாஜக வெற்றி பெறுகிறது என்று ராகுல் காந்தி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். தேர்தல் வரும்போதெல்லாம், தங்கள் சொந்த அரசியல் தோல்விகள் குறித்துச் சுயபரிசோதனை செய்துகொள்வதற்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சியானது பல்வேறு நிறுவனங்களைக் கேள்விக்குள்ளாக்குவதிலும், அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளை அரசியல்மயமாக்குவதிலும் ஈடுபடத் தொடங்குகிறது” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

மட்டுவில் அதிர்ச்சி: கொள்ளை மற்றும் கொ*லை வழக்கில் மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

ஜியோவின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாச் சலுகை: ரூ. 299-க்கு புதிய ஜியோபாரத் 4ஜி போன்! | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோவின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாச் சலுகை: ரூ. 299-க்கு புதிய ஜியோபாரத் 4ஜி போன்! | வணிகச் செய்திகள்

ஜியோவின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாச் சலுகை: ரூ. 299-க்கு புதிய ஜியோபாரத் 4ஜி போன்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin