• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசியலில் களமிறங்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா மிட்டல்.. உத்தரப் பிரதேச தேர்தலில் புதிய திருப்பம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரசியலில் களமிறங்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா மிட்டல்.. உத்தரப் பிரதேச தேர்தலில் புதிய திருப்பம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 4:35 PM IST

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இவரது அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

திவ்யா மிட்டல்
திவ்யா மிட்டல்

உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகச் சேவையிலிருந்து விலகிய சில நாட்களிலேயே அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், சுமார் 13 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. மிர்சாபூர் மற்றும் தியோரியா ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராக பணியாற்றி, தொலைதூர கிராமங்களுக்குக் குடிநீர் திட்டங்களைக் கொண்டு சேர்த்ததன் மூலம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர் திவ்யா மிட்டல்.

தனது அரசியல் வருகை குறித்துத் தெரிவித்துள்ள திவ்யா மிட்டல், உத்தரப் பிரதேச மாநிலமே தனது ‘கர்மபூமி’ என்றும், தனது அரசியல் பயணம் அங்கிருந்தே தொடங்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், நிலவும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும், மக்களுடன் நேரடியாக இணைந்து சுயேச்சையாக செயல்படப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இவரது இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தனது முடிவை விளக்கி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கவே அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 80 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில், மக்களுக்குச் சென்றடையாத பல அடிப்படை நன்மைகள் குறித்து கேள்வி கேட்கவும், அரசு அமைப்புகளில் பொறுப்புடைமையை உறுதி செய்யவும் தான் முயல்வதாகத் தெரிவித்தார்.

கிராமப்புறப் பள்ளிகள் அமைப்பதில் ஏற்படும் தாமதம், உள்கட்டமைப்புச் சீர்கேடுகள், மழைக்காலங்களில் மக்கள் சந்திக்கும் அவதிகள், வினாத்தாள் கசிவு மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இன்றைய அரசியலில் அதிகாரமும் ஆரவாரமும் மட்டுமே உள்ளது, தொலைநோக்குச் சிந்தனை இல்லை” என்று விமர்சித்த அவர், ஆசிரியர், விவசாயிகள், மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து செயல்படும்போது மட்டுமே உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Read More

Previous Post

ஃபேஸ்புக் வருமானத்துக்காக சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுபவர்களுக்கு எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

புதிய கேஸ் இணைப்புக்குத் தடை? 250% கூடுதல் விலையில் விற்கப்படும் சிலிண்டர்கள்…அன்புமணி கண்டனம் | வணிகம் போட்டோகேலரி

Next Post
புதிய கேஸ் இணைப்புக்குத் தடை? 250% கூடுதல் விலையில் விற்கப்படும் சிலிண்டர்கள்…அன்புமணி கண்டனம் | வணிகம் போட்டோகேலரி

புதிய கேஸ் இணைப்புக்குத் தடை? 250% கூடுதல் விலையில் விற்கப்படும் சிலிண்டர்கள்...அன்புமணி கண்டனம் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin