இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் புதிய எரிவாயு இணைப்புகள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவைத்துள்ளன.


