Last Updated:
அதிபர் டிரம்ப், கூகுள், ஓபன் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளியிட்டார். எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் கூகுள், ஓபன் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும், அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். அதனை ஏற்காத அதிபர் டிரம்ப், சீனாவுடனான தொழில்நுட்பப் போட்டியில் ஏஐ வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில், தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டார். இதில், எலான் மஸ்க், சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, ஜெஃப் பெசோஸ், ஜென்சன் ஹூவாங், கிரெக் ப்ரோக்மேன், டாரியோ அமோடெய் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஏஐ நிறுவனங்கள் தங்களை தாங்களே கண்காணித்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.


