• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியக் கல்வி வரலாற்றில் வரலாற்றுச் சாதனை: உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதன்முறையாக நுழைந்தது மலாயாப் பல்கலைக்கழகம் (UM)! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியக் கல்வி வரலாற்றில் வரலாற்றுச் சாதனை: உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதன்முறையாக நுழைந்தது மலாயாப் பல்கலைக்கழகம் (UM)! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகம், டைம்ஸ் உயர் கல்வி அமைப்பின் 2027-ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 194-ஆம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நுழைந்த முதல் மலேசியப் பல்கலைக்கழகம் எனும் பெருமையை மலாயாப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு தரவரிசையில் 351–400 இடைப்பட்டப் பட்டியலில் இருந்த யுஎம், தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டு தற்போது 194-ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 2,297 பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மலாயாப் பல்கலைக்கழகம் உலகளவில் முன்னணி 8.5% இடங்களில் தன் இடத்தை உறுதி செய்துள்ளது.

“உலகின் முன்னணி 200 பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவது என்பது எங்களது பயணத்தின் முடிவு அல்ல; மாறாக எங்களின் இலட்சியத்தையும் நோக்கத்தையும் பறைசாற்றும் ஒரு சான்றாகும். மலேசியப் பல்கலைக்கழகங்களால் உலக அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு நிகராகச் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வரலாற்று மைல்கல் ஒரு தெளிவான சான்றாகும்” என்று மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான் கூறினார்.

கற்பித்தல் தரம், ஆராய்ச்சிச் சூழல், ஆராய்ச்சியின் தரம், தொழில்முறைத் தொடர்பு மற்றும் சர்வதேசக் கண்ணோட்டம் ஆகிய 5 முக்கியத் தூண்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதில், பன்னாட்டு ரீதியிலான கல்வித் தொடர்புகள் மற்றும் ஆராய்ச்சிகளின் ஆழமான தரம் ஆகிய பிரிவுகளில் மலாயாப் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தனது 121-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம், நாட்டின் உயர் கல்வித் துறையை உலக அரங்கில் மேலும் வலுப்படுத்த உதவும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

வெங்காயத் தோலுக்கு இவ்வளவு பவரா.? – வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சூப்பர் உரமாக பயன்படுத்தலாம் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Next Post

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்றுடன் முடிவு

Next Post
வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்றுடன் முடிவு

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்றுடன் முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin