• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100 விவிஐபிகள்.. லிஸ்ட்டில் பிசினஸ்மேன், முதலீட்டாளர்கள்! சிலிக்கான் பள்ளத்தாக்கில் குமட்டும் ஆபாசம் | Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
100 விவிஐபிகள்.. லிஸ்ட்டில் பிசினஸ்மேன், முதலீட்டாளர்கள்! சிலிக்கான் பள்ளத்தாக்கில் குமட்டும் ஆபாசம் | Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Published: Wednesday, September 30, 2026, 10:39 [IST]

நியூயார்க்: சிலிக்கான் பள்ளத்தாக்கு.. உலகம் முழுவதும் டெக் துறையில் வேலை பார்க்கும் பலரின் கனவு இடம்… பெரியபெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், புதிய நிறுவனங்களை தொடங்கும் இளைஞர்கள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடம்… இப்படிப்பட்ட இடத்துக்குள், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளன.. தங்களுக்கு எதிராக நடக்கும் இந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி வெளிப்படையாகப் புகார் அளிக்க முடியாமல், இந்த பெண்கள் தவித்து வருகிறார்களாம்…!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கிறது… ஐடி துறையில் வேலை பார்க்கும் பலரும் கனவு காணும் இந்த இடத்தில், பாலியல் தொல்லை முதல் பாலியல் வன்கொடுமை வரை பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி பகீரை கிளப்பியுள்ளன..

Silicon Valley VIP List Sexual Allegations

இந்த கொடுமைகளையெல்லாம் பெண்கள் வெளியில் சொல்லாமல், தங்களுக்குள்ளேயே இதுகுறித்து போட்டு புழுங்கி கொள்வதாகவும், ஒருவருக்கொருவர் இந்த அக்கிரமங்களை சொல்லி புலம்பி கொள்வதாகவும் கூறப்படுகிறது.

“விஸ்பர் நெட்வொர்க்”

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு சீக்ரெட் நெட்வொர்க்கை உருவாக்கி, குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் பெயர்களைப் பரிமாறி, ஒருவரையொருவர் எச்சரித்து கொள்கிறார்கள்.. இதற்கென உருவாக்கப்பட்டதுதான் “விஸ்பர் நெட்வொர்க்”.. இந்த குழுவில், 100-க்கும் மேற்பட்ட விவிஐபிகளின் பெயர்கள் அடங்கிய லிஸ்ட் இருக்கிறதாம்.,

ஆனால், அந்த பட்டியலில் யார் பெயர்கள் இருக்கின்றன? என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகள் இருந்தும், இந்த விஷயம் ஏன் வெளியில் வரவில்லை? இதுதான் இப்போது கவனம் பெற்றுள்ள கேள்வி.

முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள்

அந்த லிஸ்ட்டில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், டெக் மற்றும் ஏஐ துறையிலுள்ள முக்கியமான நபர்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்தது, பாலியல் தொந்தரவு செய்தது, பாலியல் வன்கொடுமை செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த லிஸ்ட் பொதுவெளியில் வெளியாகவில்லை.. ஒவ்வொருவரை பற்றியும் மோசமான அனுபவம் இருந்தால், மற்ற பெண்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தகவல்கள் அந்த ரகசிய வட்டத்துக்குள்ளேயே பகிரப்படுகிறதாம்.

இப்படிப்பட்ட விவிஐபிகள் இந்த பாலியல் விவகாரங்களில் தொடர்புடையவர்களாக உள்ளதால், தங்களுடைய வேலைக்கும் எதிர்காலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற பயத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாருமே போலீசுக்கு போகவில்லையாம்.

சிலிக்கான் பள்ளத்தாக்கு

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இளைஞர்கள் தங்குவதற்காகவேவே சில வீடுகள் இருக்கின்றன. அங்கே புதிதாக பிசினஸ் ஆரம்பிப்பவர்கள், நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், முதலீடு செய்பவர்கள் என பலரும் ஒன்றாக தங்குவார்கள்…

பகலில் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், ஒன்றாக சாப்பிடுவது, பார்ட்டிக்கு செல்வது என நெருக்கமாகவும் பழகுவார்கள். இதனால் வேலை தொடர்பான பழக்கமும், தனிப்பட்ட பழக்கமும் ஒன்றாகிவிடும். இந்த சூழலில்தான் சில பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.

அப்படி பாதிக்கப்பட்டதாக சொன்னவர்களில் ஒருவர் யெஹோங் ஜூ… இவர் Zette என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சான் பிரான்சிஸ்கோவில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லியுள்ளார். இந்த சம்பவம் 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தபோதே, உடனே போலீசிலும் புகார் தந்துள்ளார்.. ஆனாலும், அந்த புகாரை போலீஸ் கண்டுகொள்ளவேயில்லையாம்.. குற்றம்சாட்டிய நபரையும் கைது செய்யவில்லையாம்.

படுக்கைக்கு அழைத்து சென்ற நபர

அதேபோல Launch House என்ற இடத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.. “நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அப்போது மயக்க மருந்து கலந்து தந்துவிட்டார்கள்.. எனக்கு எதுவுமே நினைவில் இல்லை, ஒரு நண்பர் என்னை படுக்கைக்கு என்னை அழைத்துச் சென்றது மட்டும் தெரிந்தது..

அந்த நண்பர், எங்களிடமும் தவறாக நடந்து கொண்டார் என்று மற்ற பெண்கள் என்னிடம் சொன்னார்கள். அதற்கு பிறகு, பாதிக்கப்பட்ட நாங்கள் அனைவருமே சேர்ந்து, அவர் மீது புகார் தந்ததையடுத்து, அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்கள்.. ஆனால், எனக்கு சம்பவத்தன்று என்ன நடந்தது என்று நினைவில் இல்லாததாலும், அதை நிரூபிக்க முடியாததாலும், என்னால் போலீசில் புகார் கொடுக்கவில்லை” என்கிறார்.

விவிஐபி லிஸ்ட்

சில இடங்களில் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்கச் சொல்லி மிரட்டல்களும் வருகின்றதாம். சில இடங்களில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்திய அதிர்ச்சிகரமான தகவல்களும் பதிவாகியுள்ளன… வெளிநாடுகளிலிருந்து புதிதாக வேலை தேடி வரும் பெண்களையும், தனித்து விடப்பட்டவர்களையும் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.

ஆனால், அந்த விவிஐவி லிஸ்ட்டில் அடிபடும் நபர்கள் அனைவருமே குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் கிடையாது.. பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.. அதேசமயம் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக வெளிப்படையாக புகார் கொடுத்தால் தங்களுடைய வேலை மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்பதால்தான், நடந்ததை வெளியில் சொல்லாமல், தங்களுக்குள்ளேயே சொல்லி எச்சரித்துக் கொண்டு வருகிறார்களாம்…!!!

English summary

Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?

Read More

Previous Post

இலங்கையை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

Next Post

வெங்காயத் தோலுக்கு இவ்வளவு பவரா.? – வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சூப்பர் உரமாக பயன்படுத்தலாம் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Next Post
வெங்காயத் தோலுக்கு இவ்வளவு பவரா.? – வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சூப்பர் உரமாக பயன்படுத்தலாம் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

வெங்காயத் தோலுக்கு இவ்வளவு பவரா.? - வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சூப்பர் உரமாக பயன்படுத்தலாம் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin