• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சத்யபாமாவுக்கு தண்டனை கொடுங்க.. திரும்பியும் ஏமாந்தால் தாராபுரம் குளோஸ்.. வீரமணி திகுதிகு | Dharapuram voters should punish TVK Sathyabama said Veeramani

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சத்யபாமாவுக்கு தண்டனை கொடுங்க.. திரும்பியும் ஏமாந்தால் தாராபுரம் குளோஸ்.. வீரமணி திகுதிகு | Dharapuram voters should punish TVK Sathyabama said Veeramani
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Wednesday, September 30, 2026, 9:54 [IST]

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தாராபுரம் தவெக வேட்பாளருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என வீரமணி பேசியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசுகையில், “பொதுவாக பல்வேறு காரணங்களால் இடைத்தேர்தல் வரும். இது திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். ஏன் திணித்தார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தலில் பலரும் போட்டியிட்டனர். அதில் ஒருவரை நீங்கள் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அவர் ஏன் இந்த இடைத்தேர்தலை உங்களிடம் நுழைத்தார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

Sathyabama Veeramani

இதுதான் மாற்றமா

இது இயல்பாக ஏற்பட்ட இடைத்தேர்தல் அல்ல. இது மக்களிடையே அலட்சியப்படுத்தி திணிக்கப்பட்ட தேர்தல். அதை செய்வேன், இதை செய்வேன் என சொல்லி வேட்பாளர் வெற்றி பெற்றார். அதை செய்யாமல் பதவியை ராஜினாமா செய்தார். அவரே ஆளுங்கட்சி வேட்பாளராக மாறியுள்ளார். மாற்றம் மாற்றம் என்றனர். அந்த கட்சியில் இருந்து இந்த கட்சி மாறுவது தான் மாற்றமா. மாற்றத்திற்கு புதிய விளக்கத்தை கொடுத்துள்ளனர்.

வேட்பாளர் செல்லுமிடல்லாம் எதிர்ப்புகள் வருகிறது. பல இடங்களில் மக்கள் இதை உணர்ந்துள்ளனர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளார். இதைவிட குதிரை பேரம் வேறு என்ன இருக்கிறது. மாற்றம் மாற்றம் என ஏமாற்றம் செய்கிறார்கள். கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லாமல், வேறு எதையோ சொல்லிவிட்டு போவார். தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும். யார் அதை கொடுப்பார்கள். இது மக்களின் வரிப்பணம்.

தண்டனை கொடுங்க

அதைப்பற்றி யோசிப்பதில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இந்த வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வது ஜனநாயகமா. இது யோக்கியமா. இதுதான் ஜனநாயக பண்பா. பிடிக்கவில்லை என கூறி ராஜினாமா செய்ததால் நீதிமன்றங்களே கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிர்களோ அவர்கள் உங்களை மதிக்கவில்லை. முறையானவருக்கு ஓட்டு போட்டிருந்தால் இடைத்தேர்தல் வந்திருக்காது.

செலவே ஏற்பட்டிருக்காது. தவெக வேட்பாளருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். ஒரு தோல்வியை கொடுத்தாலே அதைவிட பெரிய தண்டனை வேறு இருக்க முடியாது. அவர்களை மீண்டும் தேர்வு செய்தால், அங்கிருந்து அடுத்த கட்சிக்கு தாவும் வேலையை பார்ப்பார். உங்களுக்காக பணியாற்றும் வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். மகளிருக்கு 2,500 தருகிறோம் என்றனர். தந்தார்களா. தவறான ஏமாற்று பேச்சுக்கு வாக்களித்தால் பாதிப்பு உங்களுக்கு தான்” என்றார்.

English summary

Dravidar Kalagam chief Veeramani said, Voters of Dharapuram must punish Sathyabama. If she win again no one can save you.

Read More

Previous Post

பிரதமருக்கு எதிரான சதி மற்றும் நஞ்சூட்டும் வதந்திகள் அரசியல் எதிரிகளின் கேலிக்கூத்து: ரில்வின் சில்வா திட்டவட்டம் – Sri Lanka Tamil News

Next Post

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம் – Sri Lanka Tamil News

Next Post
கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம் – Sri Lanka Tamil News

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin