அக்டோபர் 1 முதல்.. புது ரூல்ஸ் .. SBI வாடிக்கையாளர்களே! இனி ஏடிஎம் பயன்படுத்த இதுதான் லிமிட்!
ஒவ்வொரு மாதமும் தொடங்கும் போது ஒரு சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அதேபோல ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் சில புதிய விதிமுறைகளைக் கொண்டு வரவுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. SBI பேங்கில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வரப் போகும் மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அக்டோபர் 1 முதல் பணம் எடுக்கும் விதிமுறைகளில் சில மாற்றம் வரவிருக்கிறது. எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி அடிக்கடி பணம் எடுப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எஸ்பிஐ ஏடிஎம் சார்ஜ்: SBI வங்கியில் சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை 10 பரிவர்த்தனை வரை பிற வங்கி ஏடிஎம்களில் செய்யலாம். ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது.
மற்ற வங்கி ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனை வரம்பு 10-லிருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல இதைத் தாண்டி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.
இது பணம் எடுப்பதற்கு மட்டுமல்ல பேலன்ஸ் பார்ப்பது போன்ற பிற சேவைகளுக்கும் பொருந்தும். வழங்கப்பட்டுள்ள 5 என்ற வரம்பை தாண்டி பேலன்ஸ் பார்த்தால் அதற்கு 11 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (BSBD): ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் BSBD என்று சொல்லப்படுகிற அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சேவைக் கட்டணம் அதிகரிக்க இருக்கிறது. இந்தப் புதிய கட்டணமும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
சேவிங்ஸ் அக்கவுண்ட்டை போலவே “பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டுக்கும்” எல்லா வசதியும் வழங்கப்படுகிறது. ஆனால் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை பொறுத்தவரையில் கண்டிப்பாக நீங்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை ஒவ்வொரு வங்கியையும் பொருத்து மாறுபடலாம். சில தனியார் வங்கிகளில் ரூ.5,000 வரை மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டும். ஆனால் பேசிக் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவையில்லை.
BSBD கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 4 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்யலாம். இந்த வரம்பைத் தாண்டி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது. இது சேவிங்ஸ் அக்கவுண்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். BSBD கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விதி பொருந்தும்.

