• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Tuesday, September 29, 2026, 18:19 [IST]

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் கடந்த மாதம் இறுதியில் தனது பணியை ராஜினாமா செய்தார். ஆளும் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் தான் ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.த்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த திவ்யா மிட்டல் யார்? அவருக்கும் பாஜகவினருக்கும் என்ன பிரச்சனை? அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

politics

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான்

உத்தர பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த திவ்யா மிட்டல் (வயது 43) என்ற ஐஏஎஸ் அதிகாரி திடீரென்று ராஜினாமா செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.

திவ்யா மிட்டல் வருவாய் துறையின் சிறப்பு செயலாளராக இருந்த நிலையில் ஐஏஎஸ் பதவியை உதறினார். இந்நிலையில் தான் திவ்யா மிட்டல் அரசியலில் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திவ்யா மிட்டல் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், ”சில நாட்களுக்கு முன்புதான் நான் ஐஏஎஸ் பணியில் இருந்து விலகினேன். அது உங்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். பணிச்சுமை மற்றும் மனதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் நான் உடனடியாக பதிலளிக்கவில்லை. உங்களின் கேள்விகளுக்கு நான் இப்போது பதிலளிக்கிறனே்.

அடுத்து என்ன? அரசியல் தான். மக்கள் என்னிடம், ‘நீங்கள் எல்லாவற்றையும் சாதித்துவிட்டீர்கள்; இனி என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். யாருடைய குரலும் எந்த அலுவலகத்தையும் சென்றடையவில்லையோ, அல்லது சென்றடைந்தாலும் கவனிக்கப்படவில்லையோ, அந்த மக்களின் குரலாக நான் மாற விரும்புகிறேன்.

என்னுடைய சேவையில் அதீதமன உறுதி இருந்திருந்தால் மலையே கூட வழிவிட்டிருக்கும். ஆனால் அது இல்லாதபோது, ஒரு சாதாரண கோப்பு கூட மலையை போலத் தடையாக மாறியது. இன்று நம் அரசியலில் எல்லாம் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது, கூச்சல்- குழப்பம் இருக்கிறது. ஆனால் சிந்தனை இல்லை. அந்தச் சிந்தனை இல்லாமைக்கான காரணத்தை நான் கேட்க விரும்புகிறேன்.

ஐஏஎஸ் பதவியே வேண்டாம்.. திவ்யா மிட்டல் திடீர் ராஜினாமா.. பாஜகவினரின் பிரஷரால் குட்பை?

ஐஏஎஸ் பதவியே வேண்டாம்.. திவ்யா மிட்டல் திடீர் ராஜினாமா.. பாஜகவினரின் பிரஷரால் குட்பை?

நாம் அரசியலை மாற்ற வேண்டும். நான் அரசியலில் ஈடுபடுவேன். யாருடன் சேர்ந்து இல்லை. உங்களுடன் சேர்ந்து அரசியலில் இணைந்து செயல்பட உள்ளேன்.
ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் என்னுடன் இணைய வேண்டும். அனைவரும் இணைந்தால் தான் அர்த்தமுள்ள அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்றார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அரசியலில் என்ட்ரி கொடுப்பதாக சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் அறிவித்துள்ளார். இது உத்தர பிரதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஏனென்றால் 2013 பேட்ச்சை சேர்ந்த இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றார். திவ்யா மிட்டல் உத்தர பிரதேச அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்ததாலும் மக்களுக்கு நேரடியாக சேவையாற்றும் களப்பணி துறைக்கு பணி கேட்டும் வழங்காததால் ராஜினாமா முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

அதோடு பாஜகவினருக்கும், திவ்யா மிட்டலுக்கும் இடையே பகை உள்ளதாகவும் கூறப்படுகிறது. திவ்யா மிட்டல் மிர்சாபூர் பாஸ்தி மற்றும் தியோரியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார். இந்த சமயத்தில் அவரது ஒவ்வொரு நடவடிக்கைளும் பேசப்பட்டன. மிர்சாபூர் மாவட்ட கலெக்டராக இருநதபோது அவர் சுதந்திரமடைந்து குடிநீர் வசதி கிடைக்காத லஹுரியா தா மலை கிராமத்துக்கு குழாய் வழியாக குடிநீர் வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இது நடந்தது. இதில் பாஜகவினரை அழைக்கவில்லை என்று சர்ச்சையில் சிக்கினார். இதுதொடர்பாக பாஜக தலைவர் விபூல் சிங் அதிருப்தியானார்.

ஞானேஷ் குமார் எனக்கு பாஜகவில் எம்பி பதவி வாங்கி தருவதாக கூறினார்! பகீர் கிளப்பிய ஐஏஎஸ் அதிகாரி!

ஞானேஷ் குமார் எனக்கு பாஜகவில் எம்பி பதவி வாங்கி தருவதாக கூறினார்! பகீர் கிளப்பிய ஐஏஎஸ் அதிகாரி!

திவ்யா மிட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்துககு கடிதம் எழுதப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 1ம் தேதி திவ்யா மிட்டல் தூக்கியடிககப்பட்டார். 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு தியோரியா மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தியோரியா மாவட்ட கலெ க்டராக இருந்த அவர் லக்னோவிற்கு மாற்றம் செய்யபபட்டார்.

இந்த வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் என்பது ஓரம்கட்டப்படும் துறையாக பார்க்கப்படும் நிலையில் அவர் அதற்கு நியமனம் செய்ப்பட்டார். இதனை விரும்பாமல் தான் திவ்யா மிட்டல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதனை திவ்யா மிட்டல் உறுதி செய்யாத நிலையில் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர் ராஜினாமா செய்தபோதே திவ்யா மிட்டல் அரசியலுக்குள் நுழைவார் என்று சொல்லப்பட்டது. திவ்யா மிட்டல் காங்கிரஸ் கட்சியில் இணையலாம், இதற்கு முன்னோட்டமாக அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பாஜகவினர் கூறி வந்த நிலையில் எந்த கட்சியில் இணையப்போவது இல்லை என்று கூறியுள்ளார்.

English summary

EX IAS officer Divya Mittal:IAS officer Divya Mittal, known in Uttar Pradesh as an upright official, resigned from her post late last month. While a conflict with the ruling BJP was cited as the reason for her resignation, she has now announced her entry into politics.

Read More

Previous Post

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு | Tamilmirror Online

Next Post

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin