• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
பிரித்தானியா
/
பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம்

பிரித்தானியாவின் ஃபேர்போர்ட் விமானப்படை தளத்திற்கு அருகே வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகளும் கடுமையான நிபந்தனைகளுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷயர் பகுதியில் அமைந்துள்ள ஃபேர்போர்ட் ரோயல் விமானப்படை தளத்திற்கு அருகே, பயங்கரவாத சதித்திட்டம் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் கடுமையான நிபந்தனைகளுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட பிரித்தானிய பிரஜைகளான இவர்கள், மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்களில் பயணித்த வேளையில் உள்ளூர்வாசி ஒருவரின் அவசர முறைப்பாட்டையடுத்து ஆயுதம் தாங்கிய பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். 

வெடிபொருட்கள் சட்டத்தின் கீழும், பின்னர் பயங்கரவாதச் சட்டம் பிரிவு ஐந்தின் கீழ் பயங்கரவாத தாக்குதலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

லண்டன் நியூ ஸ்கொட்லாண்ட் யார்ட் தலைமையகத்தின் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் லோரன்ஸ் டெய்லர், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் தீவிர விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினார். அவர்கள் எங்கு செல்ல வேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பன தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய இராணுவ தளத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படவிருந்த தாக்குதல் முயற்சியானது, வெளிநாட்டு சக்தியொன்றின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் அல்லது குறிப்பிட்ட நபர்களின் ஊடாக திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பான எம்ஐ5 உடன் இணைந்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேக நபர்கள் நிதி ஆதாயத்திற்காக இவ்வாறான செயலில் ஈடுபட முனைந்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பயணித்த மூன்று வாகனங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நிகழ்ந்த பகுதியைச் சூழ பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

வேறு வழியில்லை… இந்தியாவில் தனது பிடியை இறுக்க போகும் ரிசர்வ் வங்கி | There is no other way: The Reserve Bank is set to tighten its grip in India

Next Post

சரவணன் தனது அனைத்து சொத்துகளையும் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்; 12 வயது மகன் MACC-க்கு ஆஜராக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். – Malaysiakini

Next Post

சரவணன் தனது அனைத்து சொத்துகளையும் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்; 12 வயது மகன் MACC-க்கு ஆஜராக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin