• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வேறு வழியில்லை… இந்தியாவில் தனது பிடியை இறுக்க போகும் ரிசர்வ் வங்கி | There is no other way: The Reserve Bank is set to tighten its grip in India

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வேறு வழியில்லை… இந்தியாவில் தனது பிடியை இறுக்க போகும் ரிசர்வ் வங்கி | There is no other way: The Reserve Bank is set to tighten its grip in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Monday, September 28, 2026, 17:48 [IST]

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கூட்டத்தில், வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் 5.25% என்ற அளவிலேயே ரிசர்வ் வங்கி தக்கவைத்திருந்தது. ஆனால், வரவிருக்கும் அக்டோபர் கூட்டத்தில் நிலைமை தலைகீழாக மாற வாய்ப்பு இருக்கிறது. ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி தனது ‘வட்டி உயர்வு’ ஆயுதத்தைக் கையில் எடுக்கப்போவது உறுதி என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். வேறு வழியில்லை என்கிற நிலையில் ரிசர்வ் வங்கி தனது பிடியை இறுக்கியுள்ளது. ஏன் இந்த மாற்றம்? ரிசர்வ் வங்கியைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தத் தூண்டும் பின்னணி குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

ஒரு நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடும்போதும், மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையைச் சந்திக்கும்போதும், அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி உடனே என்ன செய்யும் தெரியுமா? நாட்டில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும்; அதாவது கடன் வாங்கிச் செலவழிக்கலாம், கடன் வாங்கியாவது அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்.

There is no other way The Reserve Bank is set to tighten its grip in India

அதேபோல், முதலீட்டாளர்களுக்குக் கடன் தருவதற்கான வட்டியை உயர்த்தும். இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் குறையும்; புதிதாகக் கடன் வாங்குவதும் குறையும். இதன் விளைவாகப் பொருட்களுக்கான தேவை குறைந்து, விலைவாசியும் கட்டுப்பாட்டுக்குள் வரும். அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் ரிசர்வ் வங்கி தற்போது இருக்கிறது.

எல்லாப் பொருட்களின் விலையும் உயர்வு:

ஏனெனில் இந்தியாவில் தற்போது பணவீக்கம் என்பது ஒரு சில பொருட்களோடு நின்றுவிடவில்லை. நமது நாட்டின் சில்லறை விற்பனைச் சந்தையில் கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என எல்லாமே கடுமையாக உயர்ந்துள்ளன.

சனிக்கிழமை லீவு கேட்ட வங்கி ஊழியர்களுக்கு ஞாயிறு வேலை நாள்.. திங்களும் வேலை நாள்.. மீம்ஸ் பாருங்க!

சனிக்கிழமை லீவு கேட்ட வங்கி ஊழியர்களுக்கு ஞாயிறு வேலை நாள்.. திங்களும் வேலை நாள்.. மீம்ஸ் பாருங்க!

கடந்த மார்ச் மாதத்தில் 33% பொருட்களின் விலையேற்றம் மட்டுமே 4% என்ற அளவைக் கடந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவின் பணவீக்கப் பட்டியலில் உள்ள பொருட்களில் கிட்டத்தட்ட பாதியளவு (50%) பொருட்களின் விலை 4% அல்லது அதற்கு மேலாக உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எனவே, பொருளாதார நிபுணர்கள் அனைவரும் விலைவாசி உயர்வின் அபாய நிலை குறித்து எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். விலைவாசி உயர்வு அதிகரிப்பது என்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் கழுத்தை மெல்ல மெல்ல இறுக்கிப் பிடிப்பதற்குச் சமமாகும்.

வலுவான நிலையில் பொருளாதாரம்:

தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு ஒருபுறம் அதிகம் என்றாலும், நாட்டின் பொருளாதாரம் வலுவான பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 8% என்ற அளவை எட்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேபோல, ஜூலை மாதத்தில் வங்கிக் கடன்களுக்கான தேவை 19% ஆக அதிகரித்துள்ளது; இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொழில்துறையினர் உற்பத்திப் பெருக்கத்திற்காகவும், முதலீடுகளுக்காகவும் அதிக அளவில் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. முதலீட்டை அதிகரிக்கத் தொழில்முனைவோர் கடன் வாங்க விரும்புகிறார்கள் என்றால், அந்த அளவுக்குச் சந்தையில் தேவை அதிகமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அந்த வகையில் பார்க்கும்போது பொருளாதாரம் ஆரோக்கியமாகவே இருப்பது தெரிகிறது. எனவே, ‘வளர்ச்சி பாதிக்கப்படுமோ’ என்ற அச்சத்தை ஓரம் கட்டிவிட்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி முழு கவனம் செலுத்தப்போகிறது; அதாவது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கப்போகிறது.

ஹோம் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்கள் அறிய வேண்டியவை.. ரிசர்வ் வங்கி தரப்போகும் ட்விஸ்ட்

ஹோம் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்கள் அறிய வேண்டியவை.. ரிசர்வ் வங்கி தரப்போகும் ட்விஸ்ட்

சர்வதேசச் சூழல்கள்:

இந்தியா வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இந்தியாவின் உள்நாட்டுச் சூழல்கள் மட்டுமே காரணமில்லை; வெளிநாடுகளும்தான் காரணம். குறிப்பாகச் சொல்வதென்றால், பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போருக்குப் பிறகு, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், தென்கொரியா போன்ற உலகின் பல முன்னணி மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

எனவே, உலகளவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, இந்தியாவில் வட்டி உயர்த்தப்படவில்லை என்றால், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியக் கடன் பத்திரங்களை விட்டு வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், உதாரணத்திற்குப் பத்திரங்களுக்கு அமெரிக்கா, ஜப்பான் அதிக வட்டி தருகிறது என்றால், முதலீட்டாளர்கள் அந்த நாடுகளில்தான் முதலீடு செய்வார்கள். எனவேதான் இந்தியாவும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஏற்கனவே ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பத்திற்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு என்பது போலத்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். அண்மைக்காலத்தில் இந்தியப் பங்குச்சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கருதுகிறார்கள். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலக்கத்திலேயே இருக்கிறார்கள். நடப்பாண்டில் இதுவரை மட்டும் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து சுமார் 26 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருப்பதை இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

அக்டோபரில் என்ன நடக்கும்?

கச்சா எண்ணெய் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம், சர்வதேசச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது அக்டோபர் 5 – 7 கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25% (25 basis points) உயர்த்தி 5.50% ஆக மாற்ற அதிக வாய்ப்புள்ளதாகவே பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். ‘ராய்ட்டர்ஸ்’ நடத்திய ஆய்வில் பங்கேற்ற 61 பொருளாதார நிபுணர்களில் 38 பேருக்கும் அதிகமானோர் (60%-க்கும் மேற்பட்டோர்) இந்த வட்டி உயர்வை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி அப்படி ஒரு முடிவை எடுத்தால், பணத்தைச் சேமிப்பவர்களுக்கு லாபம். ஆனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்வோர் கடன் வாங்குவோருக்கு மாதாந்திரத் தவணை (EMI) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

English summary

Are interest rates set to change? A look at the background of the bold decision the Reserve Bank of india is expected to take in October!

Read More

Previous Post

குப்பை சேகரிக்கும் தொழிலில் இருந்து மாடலிங் துறைக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 20 வயது பெண் – Sri Lanka Tamil News

Next Post

பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம் – Sri Lanka Tamil News

Next Post
பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம் – Sri Lanka Tamil News

பிரித்தானிய விமானப்படை தளத்திற்கு அருகே பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ஐவர் பிணையில் விடுதலை: விசாரணைகள் தீவிரம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin