• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தமிழ்நாட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் மேகதாது அணை! மத்திய குழு கர்நாடகம் வருகை” – டி.கே. சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தமிழ்நாட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் மேகதாது அணை! மத்திய குழு கர்நாடகம் வருகை” – டி.கே. சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 8:48 PM IST

மேகதாது அணை விவகாரம்: மத்திய குழு கர்நாடகா வருகை. தமிழக எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அணை அமையும் என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News18
News18

கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும், தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே, அதாவது மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த மேகதாது அணை அமையவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது; “கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் வறட்சி நிலைமை ஆகியவை தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் முடிவை எடுப்பதற்கு அவகாசம் வழங்குமாறு நான் பிரதமரிடம் கோரியுள்ளேன். 200-க்கும் மேற்பட்ட வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும் நிலையில் உள்ளன. இது மிகவும் தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும்.

பிரதமர் ஏற்கனவே இது குறித்து எச்சரித்திருந்த போதிலும், ஒரே ஒரு அணையைத் தவிர மற்றவை எதுவும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாங்கள் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறோம். இது தொடர்பாக சட்டமன்றத்திலும் நாங்கள் தனியாக விவாதித்தோம். இதற்கான சிறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன” எனத் தெரிவித்த அவர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#WATCH | Delhi: On the Mekedatu dam issue, Karnataka CM DK Shivakumar says, “The central government has sent a team to look into Mekedatu. I think the officers have been convinced that there is no place where Mekedatu water can be utilized for any irrigation purpose. They have… pic.twitter.com/RyePgjRybB


— ANI (@ANI) September 28, 2026

தொடர்ந்து டி.கே. சிவக்குமார் பேசியதாவது; “மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மேகதாதுவில் உள்ள நீரை எந்தவொரு பாசனத் தேவைக்கும் பயன்படுத்தக்கூடிய இடம் ஏதுமில்லை என்பதை அந்த அதிகாரிகள் உணர்ந்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் அப்பகுதி நிலப்பரப்பு முழுவதையும் ஆய்வு செய்துள்ளனர்.

தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே, அதாவது மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த மேகதாது அணை அமையவுள்ளது. எனவே, இதை நாம் பயன்படுத்த முடியாது. பெங்களூருக்கான குடிநீர் விநியோகத் திட்டத்துடன் இது இணைக்கப்படும் இடங்களையும் அவர்கள் நேரில் பார்த்துள்ளனர். ஆகையால், தமிழகம் கருதுவது போல இதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஆங்கில கால்வாயில் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உட்பட மூவர் பலி – Sri Lanka Tamil News

Next Post

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – Sri Lanka Tamil News

Next Post
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – Sri Lanka Tamil News

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin