• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TCS, Infosys: இந்திய ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக செக் வைக்கத் துடிக்கும் அமெரிக்கா! H1B விசாவுக்கு 1 வருட கெடு | US Department of Labor Launches Major H-1B Probe: Radical Visa Changes Expected in 1 Year

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TCS, Infosys: இந்திய ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக செக் வைக்கத் துடிக்கும் அமெரிக்கா! H1B விசாவுக்கு 1 வருட கெடு | US Department of Labor Launches Major H-1B Probe: Radical Visa Changes Expected in 1 Year
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TCS, Infosys: இந்திய ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக செக் வைக்கத் துடிக்கும் அமெரிக்கா! H1B விசாவுக்கு 1 வருட கெடு

இந்தியர்களின் அமெரிக்கக் கனவை நினைவாக்கும் முக்கிய கருவியாக விளங்கும் ஹெச்1பி விசா மீது கடுமையான கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு விதித்து வகும் வேளையில், அந்நாட்டின் தொழிலாளர் துறை புதிதாக ஒரு விசாரணை துவங்கியுள்ளது. இந்த விசாரணையின் முடிவுகள் மூலம் அடுத்த ஒரு வருடத்தில் ஹெச்1பி விசா செயல்முறையை மொத்தமாக மாற்றக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

ஹெச்1பி விசா என்பது அமெரிக்காவில் திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் துறையில் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவும் ஒரு திட்டம்.

TCS, Infosys: இந்திய ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக செக் வைக்கத் துடிக்கும் அமெரிக்கா! H1B விசாவுக்கு 1 வருட கெடு

ஆனால் இத்திட்டம் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதமாகவும், அதிக சம்பளம் கொடுக்கப்படும் வேலையில் குறைவான சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியரை நியமிக்கும் செயல்முறை தான் அதிகமாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கத் தொழிலாளர் துறை ஹெச்1பி விசா, PERM திட்டங்களில் நடக்கும் மோசடிகள், பணியமர்த்தலில் நடக்கும் குளறுபடிகள், வெளிநாட்டுப் பணியாளர்களைத் திட்டமிட்டு அமெரிக்க நிறுவனங்கள் சுரண்டுதல், மனிதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் விசா விதிமுறைகளை மீறி வெளிநாட்டு ஊழியர்களை தன் நிறுவனத்திலும், ஒப்பந்த அடிப்படையில் பிற நிறுவனத்திலும் பணியமர்த்துகிறதா எனப் பல கோணத்தில் ஆய்வு செய்து வருகிறது அமெரிக்க தொழிற்துறை.

இதற்காக அமெரிக்கத் தொழிற்துறை அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளையும், பெரும் பொருட் செலவும் செய்து வருவதாக அமெரிக்கத் தொழிலாளர் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோனி டிஎஸ்போசிட்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தோனி கூறுகையில் அடுத்த ஒரு வருடத்திற்குள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா திட்டம், குடியுரிமை வழங்கும் திட்டம் தற்போதுள்ள நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் H-1B விசா முறைகேடுகளைத் தடுப்பதற்காகக் குறிப்பாகச் சம்பளம் கொடுப்பதில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளது டிரம்ப் அரசு. இதோடு ஹெச்1பி விசா ஊழியர்களை அதிகம் கொண்டு இருக்கும் நிறுவனங்களில் பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் கிரீன் கார்டு வழங்கும் PERM திட்டத்தில் கூட கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஒப்புதல் அளிக்கும் விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது.

Share This Article

English summary

US Department of Labor Launches Major H-1B Probe: Radical Visa Changes Expected in 1 Year

US Department of Labor Launches Major H-1B Probe: Radical Visa Changes Expected in 1 Year — TCS, Infosys: இந்திய ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக செக் வைக்கத் துடிக்கும் அமெரிக்கா.. H1-B விசாவுக்கு 1 வருடம் கெடு..!

Story first published: Monday, September 28, 2026, 16:33 [IST]

Other articles published on Sep 28, 2026

Read More

Previous Post

சச்சினின் 100 சதங்கள் சாதனை… முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

England | பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்? முறியடித்த இங்கிலாந்து காவல்துறை! | World News (உலக செய்திகள்)

Next Post
England | பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்? முறியடித்த இங்கிலாந்து காவல்துறை! | World News (உலக செய்திகள்)

England | பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்? முறியடித்த இங்கிலாந்து காவல்துறை! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin