அடுத்த 3 மாத காலப்பகுதிக்கு எரிபொருள் மானியமொன்றை வழங்குவது தொடர்பான யோசனை இன்று (28) அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 41 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற ‘ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி’ மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அக்டோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் எரிபொருள் விலைச் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதி பதி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக் கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

