Last Updated:
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா எப்போதும் பயன்படுத்தும் என ஐ.நா.வில் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அவர், பயங்கரவாத
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா எப்போதும் பயன்படுத்தும் என்று ஐ.நா அவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுசபையின் 81-ஆவது கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்காக இந்தியாவை விமர்சித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி வரும் ஒரு நாடு, உண்மைகளைத் திரித்துக் கூறியுள்ளதாகவும், ஆனால், பயங்கரவாதமும் நட்புறவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா எப்போதும் பயன்படுத்தும் என்றும் ஜெய்சங்கர் கூறினார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் போக்கை அந்த நாடு திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


