Last Updated:
பேச்சுவார்த்தைக்கான முடிவு அமெரிக்கா கையில் இருப்பதாகவும், அச்சுறுத்தலுக்கு ஈரான் அடிபணியாது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கினால், அணு சக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதுதொடர்பான முழு விவரங்களைத் தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி பங்கேற்றார். அதில், கத்தார் மூலம் அமெரிக்காவிடம் புதிய வரைவு ஒப்பந்தம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி, அமெரிக்கா கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்று, கச்சா எண்ணெய் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் ஒரு வாரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படும் என்று கூறினார். அதேபோல், அணு சக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் புதிய நிபந்தனை விதித்துள்ளது.

