• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

16-ஆவது பொதுத் தேர்தலில் நீல அலை வீசினால் ஜாஹித் தான் பிரதமர்: ஓங் கணிப்பு! – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிசான் நேசனல் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஆகிய கூட்டணிகள் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி, அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) வெற்றி பெற்றால், பாரிசான் நேஷனல் தலைவர் அகமத் ஜாஹித் ஹமிடி அடுத்த பிரதமராவார் என்று அரசியல் ஆய்வாளர் ஓங் கியான் மிங் கணித்துள்ளார்.

பாரிசான் கூட்டணியை விட பாஸ் கட்சி அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்றாலும், பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜாஹித் ஹமிடிக்கு சபா மற்றும் சரவாக் மாநிலக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக முன்னாள் டிஏபி தலைவரான ஓங் கூறினார் செய்தி வெளியிட்டுள்ளது.

மலாய்-முஸ்லிம் ஒற்றுமை என்ற அரசியல் உத்தி, 16-ஆவது பொதுத் தேர்தலில் ‘நீல அலை’ பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் கூட்டணியின் அலை வீசி வெற்றி பெற வழிவகுக்கும் என்று நான் உணருகிறேன், என அவர் கூறினார்.

மலேசியாவில் பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் கூட்டணிகள் 112-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றும். பின்னர், அவர்கள் காபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) மற்றும் காபுங்கான் ராக்யாத் சபா ஆகியவற்றுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பார்கள்.

அதோடு, ஜாஹித் நாட்டின் 11-ஆவது பிரதமராவார், என்று ஓங் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2021-இல் அப்போதைய அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, “அம்னோ தலைவர் ஒரு பிரதமரின் அதிகாரத்தை மீறிச் செயல்பட்ட” தலைமைத்துவ படிநிலைச் சிக்கல்கள் எழுந்ததை முன்னாள் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.

இத்தகைய சிக்கல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான விருப்பம் இருப்பதால், மற்ற எந்த அம்னோ தலைவரையும் விட ஜாஹித் பிரதமராவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சுமார் 40 முதல் 50 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, மீண்டும் எதிர்க்கட்சி வரிசைக்குத் திரும்பும் என்றும் ஓங் கணித்துள்ளார்.

2008 முதல் பக்காத்தான் ஹரப்பான் வசம் இருக்கும் சிலாங்கூர் மாநில அரசுகூட வீழ்ச்சியடையக்கூடும்.

தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 76 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது.

மலாக்காவில் உள்ள அனைத்து 21 இடங்களையும் அம்னோ தக்கவைக்காமல் போகலாம்

கடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் வெற்றி பெற்ற 21 இடங்களையும் அது மீண்டும் தக்கவைத்துக் கொள்ளப் போவதாக முன்னர் கூறியிருந்த போதிலும், அடுத்த தேர்தலில் அந்த அனைத்து இடங்களிலும் அது போட்டியிடாது என்றும் ஓங் கணித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, இஸ்லாமிய கட்சியான பாஸ் கட்சியின் கோட்டைகளான கெடா, பெர்லிஸ், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ள சில இடங்களைப் பெறுவதற்கு ஈடாக, மலாக்காவில் சுமார் நான்கு இடங்களை பாரிசான் கூட்டணி, பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு வழங்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் பெரிய முட்டுக்கட்டை ஏற்படலாம். உதாரணமாக, பெரிக்காத்தான் கூடுதல் இடங்களைக் கேட்க, அதற்கு பாரிசான் மறுப்பு தெரிவித்தால் சிக்கல் எழும்.

அடுத்த மாதம் 2027 வரவு செலவுத் திட்டம் (Budget 2027) தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிற அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், இப்போதைக்கு 16-ஆவது பொதுத் தேர்தலைக் கூட்டுமாறு நெருக்குதல் அளிப்பதற்குத் தேவையான போதிய ஆதரவு பாரிசான் கூட்டணிக்கு இருக்கும் என்று ஓங் எதிர்பார்க்கவில்லை.

அந்தச் சமயத்தில், (அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கு) பாரிசான் கூட்டணிக்கு ஆதரவளிப்பதில் ஜிபிஎஸ் மற்றும் ஜிஆர்எஸ் ஆகிய கூட்டணிகள் கூடுதல் திறந்த மனதுடன் செயல்படக்கூடும்.

இத்தகையதொரு சூழல் உருவானால், அது நாடாளுமன்றக் கலைப்பிற்கும் 16-ஆவது பொதுத் தேர்தல் அழைக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடனான உறவு கசந்ததை அடுத்து, 16-ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு பாரிசான் நேசனல் கூட்டணி பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் பாரிசான் நேசனல்  கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற உதவிய பெரிகாத்தான் நேசனல் கூட்டணியும், உடனடி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான இந்த அழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும், மக்களின் நலனை மேம்படுத்துவதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதுமே தங்களின் உடனடி முன்னுரிமை என்றும் கூறி அன்வார் இந்த யோசனையை நிராகரித்துள்ளார்.

 

-fmt



Read More

Previous Post

“பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – ஈரான் புதிய நிபந்தனை! | World News (உலக செய்திகள்)

Next Post

மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

Next Post
மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin