பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் தங்களது பெயர், பயிர், பரப்பு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்ய வேண்டும்.


