Last Updated:
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ‘வெடிவழிபாடு’ நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு அடர்ந்த காடுகள் நிறைந்த பெருவழிப் பாதை வழியாக செல்லும் பக்தர்கள், காட்டு யானைகள், புலிகள் போன்ற வனவிலங்குகளை விரட்டுவதற்காகவும் தங்களின் வருகையைத் தெரிவிப்பதற்காகவும் வெடிகளைப் பயன்படுத்தி வந்தனர். இதற்கென, அனுமதி வழங்குவதற்காக தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு சடங்காகவே வெடி வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
அதே சமயம், சபரிமலை அமைந்துள்ள பகுதி, பெரியார் புலிகள் காப்பகத்தின் கீழ் வரும் நிலையில், அதிகப்படியான வெடியோசையும் அதிர்வுகளும் விலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக வனத்துறை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. சபரிமலை சன்னிதானம், மாளிகாபுரத்தம்மன் கோயில் வளாகப் பகுதிகளில் அதிகளவில் வெடிமருந்துகளைச் சேமித்து வைப்பதிலும், அதை கையாளுவதிலும் மிகப்பெரிய விபத்து அபாயங்கள் உள்ளதாக காவல் துறை எச்சரித்து வந்தது.


