Last Updated:
இஸ்ரேலுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெதன்யாகு, இஸ்ரேல் குறித்து பொய்ப் பிரசாரங்களை பரப்புபவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேடை ஏறியபோது, உலக நாடுகளின் பிரதிநிதிகள் பெருமளவில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று உரையாற்றினார். அவர் மேடை ஏறியபோது காசா மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன தூதரகத்தின் அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.
இதனால், ஆத்திரமடைந்த நெதன்யாகு, வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளை ’அறநெறியற்ற கோழைகள்’ என கடுமையாக சாடினார். காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்படுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் என்று தெரிவித்த அவர், இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடும் என்றும் ஆவேசமாகக் கூறினார். நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெதன்யாகு, இஸ்ரேல் குறித்து பொய்ப் பிரசாரங்களை பரப்புபவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


