• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாதுகாப்பு துறை பட்ஜெட் 3 மடங்கு அதிகரிப்பு – அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாதுகாப்பு துறை பட்ஜெட் 3 மடங்கு அதிகரிப்பு – அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 8:32 AM IST

எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் DEFCON 2026-இல் தெரிவித்தார். பாதுகாப்பு பட்ஜெட் மும்மடங்கு அதிகரித்துள்ளது, உள்நாட்டு உற்பத

News18
News18

எதிர்காலப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் நியூஸ் 18 குழுமம் சார்பில் பாதுகாப்புத் துறை கருத்தரங்கான DEFCON 2026-இல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா மீது பல போர்கள் திணிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக, அதாவது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

பொருளாதாரமும் பாதுகாப்பும் ஒன்றையொன்று சார்ந்தவை, மேலும் அவை ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கின்றன என்று கூறிய அவர், 2400 ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியர் இதைக் கூறியபோது எவ்வளவு உண்மையாக இருந்ததோ, அவ்வளவு உண்மையாக இது இன்றும் இருக்கிறது என்றும் தெரிவித்தார். உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் முதலீடும் அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், தற்சார்பு என்பது தேசியப் பாதுகாப்பிற்கு மையமானது என்று குறிப்பிட்டார். ஒரு நாடு தற்சார்புடன் இருக்கும்போது, ​​தேசியப் பாதுகாப்பும் வலுவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை மையமாகக் கொண்டே இந்தியாவின் அணுகுமுறை அமைந்துள்ளது என்றும் தெரிவித்த அவர், இந்தியாவிலேயே வடிவமைத்து, மேம்படுத்தி, தயாரிப்பதே நாங்கள் பின்பற்றி வரும் ஒரு தொலைநோக்குப் பார்வை என்றும் பேசினார்.

ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள் உள்ளிட்ட புதிய தலைமுறை ராணுவத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக வெளிப்படுத்திய ராஜ்நாத் சிங், எதிர்காலப் பாதுகாப்புக்கு நிலப்பரப்பு (terrain), தொழில்நுட்பம் (technology) மற்றும் சிந்தனை (thinking) ஆகிய “3T”கள் முக்கியமானவை என அவர் அடையாளம் காட்டினார். ஆயுதப் படைகளை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாறிவரும் பாதுகாப்புச் சவால்களைப் புரிந்துகொள்வது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறையில் ராஜதந்திரம் மற்றும் இராணுவத் தயார்நிலை ஆகிய இரண்டும் அடங்கியுள்ளன என்று கூறிய அவர், இந்தியா ஜனநாயகம் மற்றும் ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் தனது பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இது ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற தாக்குதல்களில் இருந்து தெளிவாகிறது என்றும் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், அணுசக்தி மிரட்டலை இந்தியா ஏற்காது என்றும், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தைகளும், வர்த்தகமும் ஒருங்கே அமையாது என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக பேசிய ராணுவத் தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி நவீன போரின் போக்கை Build என்ற சுருக்கெழுத்தின் கீழ் விளக்கினார். மேம்பட்ட தொழில்நுட்பம் எதிர்காலப் போரை வடிவமைக்கும் எனவும் ராணுவத் தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி கூறினார்.

Read More

Previous Post

கல்கிசை நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழுக்கள் இடையே மோதல்

Next Post

சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! | DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?

Next Post
சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! | DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?

சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! | DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin