Last Updated:
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை தொடர்பாக, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தேர்தல் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை தொடர்பாக, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வாக்குகள் திருடப்படுவதாகவும், இது நாடாளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட சட்டங்களைச் சட்டவிரோதமாக்குவதாகவும் சாடினார். பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்துவிட்டதாகக் கூறிய ராகுல், நாட்டின் வாக்குரிமையை அழிப்பவர் ஒரு தேச துரோகி என்றும் இதனைப் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
ஞானேஷ் குமாரைப் பிரதமர் மோடி விரும்பித் தேர்ந்தெடுத்ததாகக் கூறிய ராகுல் காந்தி, முக்கிய தலைவர்கள் தோல்வியைக் காணும்போது பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் மட்டும் ஏன் தோற்கவில்லை எனச் சந்தேகம் எழுப்பினார். அதேபோல், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ‘அப்ரூவர்’ ஆக மாற வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்தது தற்செயலானதாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
தேர்தல் நடைமுறையில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி உள்ளதாகவும், மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அபிஜித் தீப்கே எச்சரித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


