முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவின் சட்டத்தரணி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி விசாரணைக்கு முன்னிலையாக தவறியமை குறித்து மருத்துவ கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நேற்று விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கி, அவரால் புலனாய்வாளர்கள் முன்னிலையில் முன்னிலையாக இயலவில்லை என்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கண் அறுவை சிகிச்சை
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்
சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின்படி ஷிரந்தி, கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதால், தற்போது விசாரணையில் கலந்துகொள்ள இயலவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணை, ஷிரந்தி ஆதரவில் இயங்கி வந்த சிறிலிய சவியா அறக்கட்டளை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்ததாகும்.
மருத்துவப் பரிசோதனைக்காக 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இதுவரை நாடு திரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் நேற்று (24) முன்னிலையாக அவருக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
மருத்துவப் பரிசோதனை
அவர் வெளிநாடு செல்வதற்காக 16ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, புலனாய்வு அதிகாரிகளால் அந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வதாகக் கூறி பின்னர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும், அது தொடர்பான அறிவிப்பின்படி, விசாரணை அதிகாரிகளின் முன் முன்னிலையாவதற்கு அவர் நேற்று நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஷிரந்தி சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருப்பதால், எதிர்காலத் திகதியை வழங்குமாறு அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமான கோரிக்கை வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

