Last Updated:
மு.க. ஸ்டாலின் தோல்வி தற்செயல் அல்ல, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என அபிஜித் தீப்கே கோரினார்.
மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தோல்வி அடைந்தது தற்செயலானதாக இருக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் ஜந்தர் மந்தர் 2 பாயிண்ட் ஓ போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபிஜித் தீப்கே, “ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கும். அவர் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அபிஜித் தீப்கே, மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் தோல்வி தற்செயலானதாக இருக்க முடியாது எனவும் சுட்டிக் காட்டினார்.
இது குறித்து பேசிய அபிஜித் தீப்கே, “2024 தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அவர்கள் பதற்றமடைந்தனர். ‘400-க்கும் மேல்’ (400 paar) என்ற முழக்கத்தை முன்வைத்திருந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கை 240 இடங்களாகக் குறைந்தது. அதன் பிறகு, நாட்டின் மனநிலை மாறுவதையும், பிராந்திய சக்திகள் வலுவாக உருவெடுத்திருப்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.
VIDEO | Delhi: Addressing a press conference, Cockroach Janata Party founder Abhijeet Dipke, says, “If within 48 hours Gyanesh Kumar doesn’t resign, the Cockroach Janata Party will start a nationwide agitation. We won’t step back till the time Gyanesh Kumar resigns.”#CJP #CEC… pic.twitter.com/hAkRfX9ar2
— Press Trust of India (@PTI_News) September 24, 2026
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, என்சிபி (NCP), மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி எனப் பலரும் – அதாவது இந்த முதலமைச்சர்கள் அனைவரும் – ஒருவர்பின் ஒருவராகத் தோற்கடிக்கப்பட்டனர். இது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது; இதில் ஒரு குறிப்பிட்ட போக்கு (pattern) தெரிகிறது.
2024 தேர்தலில் இந்த முதலமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்திருந்தனர். அப்படியிருக்க, அவர்கள் எப்படி ஒருவர்பின் ஒருவராக வீழ்த்தப்பட்டனர்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியிலிருந்து 50,000 வாக்குகள் நீக்கப்பட்டன, அதனால் அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
VIDEO | Delhi: Addressing a press conference, Cockroach Janata Party founder Abhijeet Dipke, says, “The BJP could not achieve a majority in the 2024 elections. The panic button was pressed when they failed to achieve a majority. They had come down to 240 seats after raising the… pic.twitter.com/FEMneAepRD
— Press Trust of India (@PTI_News) September 24, 2026
மு.க. ஸ்டாலினின் தொகுதியிலிருந்து ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். (ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியிலிருந்து 40,000 வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்” எனத் தெரிவித்தார். தேர்தல் நடைமுறையில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி உள்ளதாகவும், மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும் அபிஜித் தீப்கே குற்றஞ்சாட்டினார்.

