மருத்துவப் பரிசோதனை என்று கூறிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, வியாழக்கிழமை (24) பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரிடம், வியாழக்கிழமை (24) ஆஜராகுமாறு கோரி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது.

