• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விரும்பி தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி. முக்கியத் தலைவர்கள் தோல்வியடையும்போதும், மோடியும், அமித்ஷாவும் மட்டும் ஏன் தோற்கவில்லை? ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது; “இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் மோசடி நடந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை விரும்பி தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி. முக்கியத் தலைவர்கள் தோல்வியடையும்போதும், மோடியும், அமித்ஷாவும் மட்டும் ஏன் தோற்கவில்லை? எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளில் குளறுபடி நடந்துள்ளது. வாக்கு திருட்டை காங்கிரஸ் அம்பலப்படுத்திய அதே நேரத்தில்தான் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய சூழலிலேயே வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசின் மீது மக்களின் எதிரான மனநிலை மிக விரைவிலேயே உருவாகிவிடும். வங்கதேசப் போரில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கின் உச்சத்தில் இருந்தபோதே இந்திரா காந்திக்குக்கூட, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு அலையையும் பெரும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிட்டது.

அடுத்தடுத்து வந்த பல தலைவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்களுக்கும் சரி, பிராந்தியக் கட்சிகளுக்கும் சரி, இத்தகைய சூழல் உருவாவது இயல்பு. ஆனால், ஏனோ தெரியவில்லை, நரேந்திர மோடிக்கோ, அமித் ஷாவுக்கோ அல்லது பாஜகவுக்கோ மட்டும் இத்தகைய நிலை ஒருபோதும் ஏற்படுவதில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சி அதிகாரம் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறி வந்துள்ளது. ஆனால் திடீரென ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மறைந்துவிடுகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் என எல்லா இடங்களிலும் திடீரென அந்த அதிருப்தி மறைந்திருக்கிறது.

ஒரு தனிநபரின் செல்வாக்கையோ அல்லது ஒரு அரசாங்கத்தின் செயல்பாட்டையோ எங்களால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி எப்படி திடீரென மறைந்துவிடுகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனநாயக முறை அமலில் உள்ள எந்தவொரு நாட்டிலும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி இல்லாமல் இருந்ததில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன; அந்தச் சட்டங்களிலிருந்துதான் நமது நிறுவனங்கள் உருவாகின்றன. இது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. வாக்குரிமை அழிக்கப்பட்டால், நமது அரசியலமைப்புச் சட்டமும் அழிக்கப்பட்டதாகிவிடும். அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டால், நமது சட்டங்கள் சட்டவிரோதமானவையாகிவிடும். சட்டங்கள் சட்டவிரோதமானவையாகிவிட்டால், நமது நிறுவனங்கள் அர்த்தமற்றவையாகிவிடும்.

இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், இது வாக்குரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது ஒவ்வொரு இந்தியரின் கருத்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களின் வெளிப்பாட்டு உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும். வாக்குரிமையில் ஏதோ ஒரு சிக்கல் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.

Read More

Previous Post

ஜானகி டி சொய்சாவுக்கு விளக்கமறியல் | Tamilmirror Online

Next Post

400 மீ. கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா.. 2 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
400 மீ. கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா.. 2 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

400 மீ. கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா.. 2 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை... | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin