• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! | OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! | OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஓபன் ஏஐ உருவாக்கிய AI ஏஜென்ட் ஒன்று அரசாங்க இணையதளத்தையே ஹேக்கிங் செய்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை காலமாக ஏஐ அமைப்புகள் மனிதர்கள் தலையீடு இல்லாமல் தாமாக செயல்படுகின்றன, ஹேக்கிங் செய்கின்றன, தாங்களாகவே ஒரு டீமை உருவாக்கி கூட்டு சதியில் ஈடுபடுகின்றன என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார சேவையான மெடிக்கேர் (Medicare) தரவு போர்ட்டலுக்குள் ஓபன் ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்ட் முறைகேடாக நுழைந்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்த பாதுகாப்பு அச்சங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்த தகவலை வெளியிட்டார். கடந்த ஜூன் 18 அன்று, ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் Medicare Statistics Reporting Service இணையதள போர்ட்டலை அணுகியுள்ளது. இந்த தளம் சர்வீசஸ் ஆஸ்திரேலியா என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பொது மருத்துவ செலவுகள் மற்றும் பொது சுகாதார தரவுகள் குறித்து அந்த ஏஐ ஏஜென்ட் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, அதன் பாதுகாப்பு தடைகளை தாண்டி, பொது மற்றும் பொது அல்லாத ரகசிய கோப்புகளை ஊடுருவி பார்த்துள்ளது. அதாவது, தனக்கு வேண்டாம் அல்லது முடியாது என்று வந்த தடையை மீறி அது உள்ளே நுழைந்துள்ளது. அரசாங்க இணையதளத்திற்குள் ஒரு ஏஐ ஏஜென்ட் ஊடுருவியது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த ஏஐ ஊடுருவல் குறித்து பேசிய பிரதமர் அல்பானிஸ், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளார். தற்போதைய முதற்கட்ட விசாரணைகளின்படி, தனிநபர் மெடிக்கேர் தகவல்கள் எதுவும் திருடப்படவோ அல்லது அணுகப்படவோ இல்லை என கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணையை ஆஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு முகமை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்த பின்னரே ஆஸ்திரேலிய அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனை பிரதமர் அல்பானிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி அன்றுதான், ஓபன் ஏஐ நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு தகவல் தந்தது என்றும் ஏன் இந்த தாமதம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் அல்பானிஸ் பேசியுள்ளார். அப்போது, இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்த அவர் அரசாங்க இணையதளத்தில் ஊடுறுவியதே தவறு அதனை 3 மாதங்கள் தாமதமாக தெரிவிப்பது இன்னும் பெரிய தவறு, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறினாராம்.

இந்த சம்பவம் உலக நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. சமீபகாலமாக AI ஏஜென்ட்டுகள் தாங்களாகவே கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் கூட, ஓபன் ஏஐ உருவாக்கிய ஏஐ அமைப்புகள் சோதனை கட்டுப்பாடுகளில் இருந்து தப்பி ஹக்கிங் ஃபேஸ் என்ற மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுகளுக்குள் இரகசியமாக ஊடுருவின.

இது போல சுயமாக இயங்கும் ஏஐ கருவிகள் அரசாங்க இணையதளங்களையும், பாதுகாப்பு வலைப்பின்னல்களையும் மனிதர்களின் நேரடி மேற்பார்வை இன்றி மீறும் திறன் கொண்டவையாக மாறுவது எதிர்காலத்தில் பெரும் சைபர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Share This Article

English summary

OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”

அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! / An AI agent developed by OpenAI allegedly gained unauthorised access to Australia’s Medicare Statistics Reporting Service portal on June 18 while researching public healthcare spending and medical statistics.

Story first published: Thursday, September 24, 2026, 8:07 [IST]

Other articles published on Sep 24, 2026

Read More

Previous Post

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தகுதி நீக்க செய்ய தீர்மானம் – எதிர்க்கட்சிகள் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராஹிம் காலமானார் | Makkal Osai

Next Post
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராஹிம் காலமானார் | Makkal Osai

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராஹிம் காலமானார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin