• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
இந்தியா
/
வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற சிந்தன் சிவிர் மாநாட்டில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இரண்டு நாள் சிந்தன் சிவிர் கருத்தரங்கின் முதல் நாள் அமர்வு புதுடில்லியில் இடம்பெற்றதுடன், இதன்போது நல்லாட்சி, சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 இலக்குகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில், அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சிந்தனை அமர்வின் போது மத்திய அமைச்சர்கள் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுடனும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாகக் கலந்துரையாடினார். அமைச்சர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்த பிரதமர், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். 

வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை பலப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை துரிதமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

அமைச்சரவைச் செயலகம், நிதி ஆயோக் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் குழுக்களினால் தயாரிக்கப்பட்ட சீர்திருத்தங்கள், மக்களின் வாழ்க்கை வசதிகளை இலகுவாக்குதல் மற்றும் விதிகளுக்கு இணங்குவதை எளிமையாக்குதல் போன்ற முக்கிய விடயங்கள் இக்கலந்துரையாடலில் ஒருங்கிணைக்கப்பட்டன. 

2021 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 2047 ஆம் ஆண்டளவில் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால வரைபடங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

அரசாங்கத் திட்டங்களின் முன்னேற்றம், கொள்கை அமுலாக்கம், நேர முகாமைத்துவம் மற்றும் அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த இரு நாள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும். 

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுமே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோளாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ளதுடன், இவ்வாறான மீளாய்வுக் கூட்டங்கள் அடுத்த வாரமும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

Previous Post

அரக்கோணம் – ரேணிகுண்டா இடையேயான ரயில் பாதை பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஒரேயொரு வீடியோதான்… வெறும் 58 நொடிகளில் உலக ஃபேமஸான பாலய்யா… எப்படி தெரியுமா? | Nandamuri Balakrishna meme | Balaiyaah | Iran US War | உலகம் போட்டோகேலரி

Next Post
ஒரேயொரு வீடியோதான்… வெறும் 58 நொடிகளில் உலக ஃபேமஸான பாலய்யா… எப்படி தெரியுமா? | Nandamuri Balakrishna meme | Balaiyaah | Iran US War | உலகம் போட்டோகேலரி

ஒரேயொரு வீடியோதான்... வெறும் 58 நொடிகளில் உலக ஃபேமஸான பாலய்யா... எப்படி தெரியுமா? | Nandamuri Balakrishna meme | Balaiyaah | Iran US War | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin