Last Updated:
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ஆதரவைப் பெற்ற மொத்தம் 48 விளையாட்டு வீரர்கள் 9 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
ஜப்பானின் எய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவருமான நீதா அம்பானி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு “ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கோட்டை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் இலக்குக் கோட்டை எட்டுவதை நோக்கி கனவு காண முடியும்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் இப்போட்டிகளுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு நீதா அம்பானி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது-
“ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு மேடைகளில் ஒன்றில் நீங்கள் தடம் பதிக்கும் இந்த வேளையில், ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் நல்வாழ்த்துக்களையும் நீங்கள் சுமந்து செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
துணிச்சலோடும் மகிழ்ச்சியோடும் களத்தில் போட்டியிடுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யப்போகும் சாதனைகள் பதக்கங்களை வெல்வதைத் தாண்டி பல நன்மைகளைத் தரும். ஒரு வாய்ப்பு ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றும். ஒரு செயல்முறை ஒரு கனவை உருவாக்கும். ஒரு விளையாட்டு வீரனால் ஒட்டுமொத்த தலைமுறைக்கே ஊக்கமாக அமைய முடியும். இது உங்களுக்கான தருணம், இதைச் சாதனைத் தருணமாக மாற்றுங்கள். ஒட்டுமொத்த நாடும் உங்களுக்காகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Founder-Chairperson of Reliance Foundation, Nita M. Ambani, extended best wishes to Indian athletes for the Asian Games
Sharing her message with Team India, Mrs. Nita M Ambani says: “My dear athletes of Team India, as you step onto one of Asia’s biggest sporting stages, remember… pic.twitter.com/Ox8XevzzSh
— ANI (@ANI) September 19, 2026
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ஆதரவைப் பெற்ற மொத்தம் 48 விளையாட்டு வீரர்கள் 9 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதில் இந்தியாவின் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்களான லவ்லினா போர்கோஹெய்ன், தேஜஸ்வின் சங்கர், ஸ்ரீசங்கர் முரளி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.
மேலும், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக விளங்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன், களத்திலும் களத்திற்கு வெளியேயும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, ‘சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்’ விளையாட்டு மருத்துவக் குழு (Sports Medicine Team) மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் இந்தியக் குழுவோடு இணைந்து வீரர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் பிசியோதெரபி உதவிகளை வழங்கி வருகின்றனர்.


