அமெரிக்காவை போல் மாறும் இந்தியா.. ஏஐ, குவான்டம் கம்பியூட்டிங் பிரிவில் புது பணக்காரர்கள்!
இந்தியா பணக்காரர்கள் பட்டியலுக்கும், அமெரிக்க பணக்கார்கள் பட்டியலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதுதான் டெக்னாலஜி துறை பணக்காரர்கள். ஏஐ துறை வளர்ச்சியை தொடர்ந்து அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான டெக் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக ஆந்திரோபிக் நிறுவனத்தில் மட்டும் சுமார் 7 பேர் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதன் எதிரொலி இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
இன்று வெளியான M3M ஹூரன் இந்திய பணக்காரர்கள் 2026 பட்டியலில் டெக்னாலஜி, ஐடி, செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்புடையவர்களை கொண்ட இந்த பட்டியலில் சுமார் 1810 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதில் முக்கியமாக பெங்களூரைச் சேர்ந்த QpiAI நிறுவனத்தின் நிறுவனர் நாகேந்திர நாகராஜா ஹூரன் இந்திய பணக்கார்ரகள் பட்டியலில் இடம்பெறும் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையை சேர்ந்த பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். சுமார் ரூ.1,700 கோடி சொத்து மதிப்புடன் இருக்கும் நாகேந்திர நாகராஜா இந்திய குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைக்கு புதிய அடையாளமாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக ஹெச்சிஎல் ஷிவ் நாடார், அவரது மகள் ரோஷினி நாடார், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி போன்றோர் இடம்பெற்று இருந்தாலும், புதிய பணக்காரர்கள் நீண்ட காலமாக சேர்க்கப்படாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ மூலம் சிலர் இப்பட்டியலுக்குள் நுழைந்தாலும் தற்போது மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் மூலம் சொத்துக்களை உருவாக்கப்பட்ட நபர்கள் இப்பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இதேபோல் இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) துறையும் ஹூரன் பட்டியலில் தனித் துறையாக முதல் முறையாக வகுத்துள்ளது.
AI நிறுவனமான Wispr Flow-வின் இணை நிறுவனர்களான தனய் கோத்தாரி மற்றும் சஹாஜ் கார்க் ஆகிய இருவரும் தலா ரூ.4,200 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் வெறும் 28 வயது தான் ஆகிறது.
இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் AI துறையில் மொத்தம் 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் மொத் சொத்து மதிப்பு ரூ.3.07 லட்சம் கோடியாக உள்ளது.இந்த 19 பேரில் 15 பேர் இந்த ஆண்டு புதிதாக நுழைந்துள்ளனர். இதுதான் ஏஐ பவர்.
ஏஐ, குவாண்டம் கம்பியூட்டிங் துறையை தாண்டி இந்தாண்டு Aerospace மற்றும் Defence துறையை சேர்ந்த 23 பேர் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.
