• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள்.. வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள்.. வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 8:18 PM IST

இந்த ஆண்டின் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியிலிருந்து 13 வீரர்கள் இந்தத் தொடரிலும் இடம் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 (T20I) தொடரிலிருந்து, அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா காயம் காரணமாக விலகியுள்ளார். அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 16 பேர்கொண்ட அணியை அறிவித்துள்ளது.

விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர அவருக்குச் சுமார் 6 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை அவர் தவறவிடுகிறார்.

இருப்பினும், நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கெதிரான ஒருநாள் (ODI) தொடருக்குள் அவர் குணமடைந்து அணியில் இணைவார் என்று நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் மீண்டும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஓராண்டிற்கும் மேலாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆடம் மில்னே, தற்போது லோக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன் போன்ற வலுவான வேகப்பந்து வீச்சாளர்களுடன் அணியில் இணைந்துள்ளார். கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் பென் சீயர்ஸ் இத்தொடருக்கான தேர்வில் பரிசீலிக்கப்படவில்லை.

இந்த ஆண்டின் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியிலிருந்து 13 வீரர்கள் இந்தத் தொடரிலும் இடம் பிடித்துள்ளனர். மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான இந்த 16 பேர் கொண்ட நியூசிலாந்து அணி, தற்போதைய டி20 உலக சாம்பியனான இந்தியாவைத் தங்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

நியூசிலாந்து டி20 அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபர்குசன், சாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பிவோன் ஜேக்கப்ஸ், கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் செஃபெர்ட், நாதன் ஸ்மித்.

Read More

Previous Post

தலைமை தேர்தல் ஆணையர் Vs தேர்தல் ஆணையர்கள்: யாருக்கு என்ன அதிகாரம்? – எளிய விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அமெரிக்காவை போல் மாறும் இந்தியா.. ஏஐ, குவான்டம் கம்பியூட்டிங் பிரிவில் புது பணக்காரர்கள்! | India’s Tech Billionaire Boom: AI & Quantum Computing Pioneers Debut in Hurun Rich List 2026

Next Post
அமெரிக்காவை போல் மாறும் இந்தியா.. ஏஐ, குவான்டம் கம்பியூட்டிங் பிரிவில் புது பணக்காரர்கள்! | India’s Tech Billionaire Boom: AI & Quantum Computing Pioneers Debut in Hurun Rich List 2026

அமெரிக்காவை போல் மாறும் இந்தியா.. ஏஐ, குவான்டம் கம்பியூட்டிங் பிரிவில் புது பணக்காரர்கள்! | India’s Tech Billionaire Boom: AI & Quantum Computing Pioneers Debut in Hurun Rich List 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin