• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் Vs தேர்தல் ஆணையர்கள்: யாருக்கு என்ன அதிகாரம்? – எளிய விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தலைமை தேர்தல் ஆணையர் Vs தேர்தல் ஆணையர்கள்: யாருக்கு என்ன அதிகாரம்? – எளிய விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய தேர்தல் ஆணையம் பற்றி அரசமைப்பு சொல்வது என்ன?  தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கையிலான பிற தேர்தல் ஆணையர்களையும் (இருப்பின்) கொண்டிருக்கும்” என்று கூறுகிறது. அதாவது, தலைமை தேர்தல் தவிர்த்து ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு உட்பட்டது ஆகும்.

ராஜிவ் காந்தி Vs வி.பி சிங்: இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டதிலிருந்து சுமார் 39 ஆண்டுகள் ஒற்றை உறுப்பினர் அமைப்பாகவே (Single-Member Body) இயங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே முழு ஆணையமாகச் செயல்பட்டார். 61-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டதால் பணிச்சுமை அதிகரித்தது.  இதன் காரணமாக, அப்போதைய ராஜிவ் காந்தி அரசு முதன்முறையாக எஸ்.எஸ். தனோவா, வி.எஸ். சீகெல் ஆகிய இருவரைப் பிற தேர்தல் ஆணையர்களாக நியமித்தது. இருப்பினும், ஆட்சி மாற்றத்திற்குப் பின், புதிதாக அமைந்த வி.பி.சிங் அரசு, இரண்டு தேர்தலை ஆணையர் பதவிகளையும் ரத்து செய்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் (S.S. Dhanoa v. Union of India,1991), அரசின் உத்தரவு  செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து,1993ம் வருட, ‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் திருத்தச் சட்டம்,  மூலமே, இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், 2 பிற தேர்தல் ஆணையர்கள் அடங்கிய 3 உறுப்பினர்களைக் கொண்ட பல உறுப்பினர் அமைப்பாக நிரந்தரமாக்கப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையருக்கு கூடுதல் சம்பளமா? இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 324(2)-ன் படி, குடியரசுத் தலைவரால் மூவரும் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் ஆகிய மூவருமே உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான அந்தஸ்து, சம்பளம் மற்றும் படிகளைப் பெறுகிறார்கள்.

2023 வருட தேர்தல் ஆணையம் நியமன சட்டத்தின் படி, “இந்திய அரசில் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அல்லது அந்தப் பதவியை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே இப்பதவிக்குத் தகுதியானவர்கள். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை பதவிக்காலம் ஆகும்.

கேள்வி பதில்
மூவருக்கும்  சம்பளம் மற்றும் படிகள் ஒன்றா? ஆம். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான சமமான சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மூவருக்கும் பதவிக்காலம் ஒன்றா ஆம்.  6 வருடம் அல்லது 62 வயது வரை
மூவருக்கும் தகுதிகள் ஒன்றா? ஆம்.
முடிவெடுக்கும் வாக்கு அதிகாரம் ஆம். ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை (2:1) அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்
பதவி நீக்கம் செய்யும் முறை (Removal Procedure) ஒன்றா? இல்லை – தலைமை ஆணையரை நாடாளுமன்றச் சிறப்புப் பெரும்பான்மை (Impeachment) மூலம் மட்டுமே நீக்க முடியும்
எத்தனை தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டும் என அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லை
தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் முடிவுகள் எப்படி எடுக்கப்படும்?

தலைமை தேர்தல் ஆணையர் அமைப்பின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். ஆணையத்தின் முடிவுகளில் மூன்று ஆணையர்களுக்கும் சமமான அதிகாரமும், சமமான வாக்கு உரிமையும் உண்டு. உதாரணமாக, 2023ம் வருட தேர்தல் ஆணையச் சட்டத்தின் படி (The Chief Election Commissioner and Other Election Commissioners Act, 2023), தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் (பிரிவு 10) அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும்.

ஆணையத்தின் முடிவுகளில் தலைமை தேர்தல் ஆணையருக்குத் தனிப்பட்ட வீட்டோ அதிகாரமோ அல்லது கூடுதல் வாக்கு உரிமையோ கிடையாது. 1995ம் வருட ‘டி.என். சேஷன் vs இந்திய யூனியன்’வழக்கில், “தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் சமமானவர்களில் முதன்மையானவர் (First among equals) மட்டுமே; அவர் மற்ற ஆணையர்களுக்கு மேலதிகாரி அல்ல என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

பதவி நீக்கம் செய்வது எப்படி?  இங்கு தான் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு சூட்சுமமான வேறுபாடு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையரை அவ்வளவு எளிதில் அரசு பதவி நீக்கம் செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது போலவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை (2/3rd Special Majority) மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தீர்மானத்தின் அடிப்டையில் குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்ய முடியும் (Article 324(5)). ஆனால், பிற தேர்தல் ஆணையர்கள் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத் தீர்மானம் என எதுவும் தேவையில்லை. தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும்.

ஆணையத்தின் அன்றாட முடிவுகளை எடுப்பதில் மூன்று ஆணையர்களுக்கும் சமமான அதிகாரமும், சமமான வாக்கு உரிமையும் உண்டு என்று சட்டப்பூர்வமாகக் கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தில் ‘எத்தனை ஆணையர்கள் இருக்க வேண்டும்’ என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மற்றும் பிற ஆணையர்களைப் ‘பதவி நீக்கம் செய்ய தலைமை ஆணையரின் பரிந்துரை தேவை’ போன்ற விதிகளின் காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்ற இருவரையும் விட மேலதிகாரியோ என்ற பிம்பமும் எண்ணமும் இயல்பாகவே உருவாகிறது. இந்த சட்டப்பூர்வ முரண்பாடே தேர்தல் ஆணையக் கட்டமைப்பில் உள்ள ‘அமைப்பியல் சமனின்மை’ ஆகும்.

Read More

Previous Post

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

Next Post

இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள்.. வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள்.. வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.. | கிரிக்கெட் செய்திகள்

இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள்.. வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin