• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா? | Donald Trump Weighs Historic US Diesel Export Ban as Domestic Prices Hit Record $6.53

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா? | Donald Trump Weighs Historic US Diesel Export Ban as Domestic Prices Hit Record $6.53
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா?

சவுதி – ஹவுதி, அமெரிக்கா – ஈரான், இஸ்ரேல் – லெபனான், உக்ரைன் – ரஷ்யா என உலகளவில் பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நாடுகள் போரில் மூழ்கியிருக்கும் வேளையில், ஹார்முஸ், பாம் அல் மண்டெப் வழித்தடங்கள் முடங்கப்பட்டு இருக்கும் காரணத்தால் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஆசியச் சந்தையில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பாவுக்கும் சென்றுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா?

ஐநா பொதுக்கூட்டத்தில் ஈரான், கியூபா நாடுகள் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கத்தாலும், கடுமையான கடன் நெருக்கடியாலும் தவித்து வரும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாமல் பெரும் வலிமையுடன் இருப்பதாக டிரம்ப் ஐநா கூட்டத்தில் பேசியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த பிரச்சனையைக் கிளப்பும் விதமாக டிரம்ப், அமெரிக்காவில் அதீத விலைக்கு டீசல் உற்பத்தி செய்யப்பட்டு, அதீத விலைக்கு விற்கப்படும் நிலையில், டீசலை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதி தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் ஈரானிய விமானங்களுக்கு உலக நாடுகள் எவ்விதமான உதவியும் செய்யக்கூடாது என அறிவித்த அமெரிக்காவின் கருவூல துறையின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் டீசல் ஏற்றுமதி தடை குறித்து சிஎன்பிசி சேனலிடம் பேசியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குச் செய்யப்படும் டீசல் ஏற்றுமதி மீது முழுமையான தடை விதிக்கலாமா அல்லது 50 சதவீத டீசல் ஏற்றுமதி தடையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சரக்கு போக்குவரத்துக்கு உயிர் நாடியாக இருக்கும் டீசல் விற்பனை விலை 6.53 டாலர் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 75% அதிகமாகும். மேலும் இந்த டீசல் விலை உயர்வு அமெரிக்காவின் ரீடைல் பணவீக்க உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய டீசல் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருக்கும் வேளையில், இந்த ஏற்றுமதி தடை விதித்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஐரோப்பிய நாடுகள் தான். ஏற்கனவே பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் சவுதி சப்ளை தடைப்பட்ட காரணத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அமெரிக்காவும் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தால் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

இதனால் டிரம்ப் அரசின் வரலாற்று முடிவு மூலம் உலகளாவிய எரிபொருள் விநியோக நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.

Share This Article

English summary

Donald Trump Weighs Historic US Diesel Export Ban as Domestic Prices Hit Record $6.53

Donald Trump Weighs Historic US Diesel Export Ban as Domestic Prices Hit Record $6.53 — டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. அமெரிக்க மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா?

Story first published: Wednesday, September 23, 2026, 15:21 [IST]

Other articles published on Sep 23, 2026

Read More

Previous Post

கிம் கொடுத்த ஓவர் பில்டப்.. ஏவுகணை சோதனையில் இடிக்கும் 3 கணக்கு.. சொதப்புதா வடகொரியா? என்ன நடக்குது | North Korea Missile Test.. Kim’s Big Claims Don’t Add Up? 3 Things Raising Questions

Next Post

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கவுரவம் | Makkal Osai

Next Post
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கவுரவம் | Makkal Osai

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கவுரவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin