Last Updated:
ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், கிரீன்லாந்தில் தங்க பாதுகாப்பு கட்டமைப்பை அமெரிக்கா நிறுவ உள்ளது.
கிரீன்லாந்தில் அதிகஅளவில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்து தீவு, அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. ஆர்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 57,000 பேர் மட்டும் வசிக்கும் இந்த தீவை, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு கிரீன்லாந்து தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐநா பொது சபைக் கூட்டத்துக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை டென்மார்க் பிரதமர் மெட்டி ஃபிரெடிரிக்சன், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெடரிக் நீல்சன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, மூன்று பேருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிரீன்லாந்தை அமெரிக்காவே கைப்பற்றுவது என்ற டிரம்ப்பின் நிலைப்பாட்டுக்கு மாறாக, அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


