AI யூஸ் பண்ணுங்க.. ஆனா இத மட்டும் பண்ணிடாதீங்க..!! ஐடி ஊழியர்களுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!!
ஏஐ தொழில்நுட்பம் பலரது வேலைகளையே மாறி அமைத்துவிட்டது. குறிப்பாக ஐடி துறையில் மாத கணக்கில் ஊழியர்கள் எழுதி வந்த கோடிங்கை ஏஐ தொழில்நுட்பம் சில நிமிடங்களில் முடித்து விடுகிறது. இதனால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் கோடிங் உள்ளிட்ட பணிகளை பெரும்பாலும் ஏஐ வசமே ஒப்படைத்துவிட்டன.
ஏஐ வளர்ச்சி டெக் உலகில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் பணியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் பகிர்ந்த பதிவு ஒன்று உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதில் தந்துள்ளார்.

Voxium என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்போதைய இன்ஜினியரிங் சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நான் புதிய நிறுவனத்தில் சேர்ந்து அரை மாதமாகிறது, ஆனால் இங்கு யாருக்குமே எங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை, Code, Tests, PRDs, டிக்கெட்டுகள், அதன் தீர்வுகள் மற்றும் அறிக்கைகள் என அனைத்துமே Anthropic நிறுவனத்தின் Claude Code மூலமாகவே உருவாக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
என்னுடைய டீமில் யாருக்கும் இந்த முறை பிடிக்கவில்லை. தினமும் 12 முதல் 13 மணி நேரம் வெறும் என்டர் தட்டுவதற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள். எந்தவொரு பிழையையும் நாமே தீர்ப்பது கிடையாது, ஆழமான சிந்தனை இல்லை. எல்லாமே ஏஐ மூலமாகவே செய்யப்படுகிறது. இது மிகவும் சோர்வடைய செய்யும் விஷயமாக உள்ளது என கூறியுள்ளார்.
இதனை ரீஷேர் செய்துள்ள Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்த நிலையை நினைத்து வருந்துகிறேன் என கூறியுள்ளார். இது சோகமானது. நான் எங்கள் இன்ஜினியர்களிடம் AI-ஐப் பயன்படுத்துங்கள் என சொல்கிறேன், ஆனால் ஒருபோதும் நமது புரிதலை அதனிடம் விட்டுவிடாதீர்கள் என கூறுவேன் என்கிறார். நிறுவனங்கள் ஏஐ கோடிங் கருவிகளின் தாக்கத்தை இன்ஜினியர்கள் முழுமையாக புரிந்துகொள்வதற்கு முன்பே அவற்றை மிகவும் வேகமாக ஏற்றுக்கொண்டுள்ளன என கூறி இதில் உள்ள ஆபத்தை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
“Nobody knows anything here. The specs, code, tests, PRDs, tickets, resolution of those tickets, reports, etc., everything is made by Claude Code. Nobody on my team likes this. They are being forced to ship as much as they can.”
This is sad. I tell our engineers to use AI but… https://t.co/8zSLzPRGFP
— Sridhar Vembu (@svembu) September 21, 2026 “>
ஒரு ஆடம்பரமான புதிய காரில், என்னென்ன இருக்கிறது என்றே தெரியாமல் நாம் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறோம், இது நிச்சயம் பேரழிவை வரவழைக்கும் என கூறியுள்ளார். அதாவது ஏஐ கோடிங் வேலையை எளிமையாக்குகிறது ஆனால் இதில் உள்ள பாதகங்கள் என்னென்ன என்ற புரிதலே இல்லாமல் இவ்வளவு வேகமாக நடைமுறைப்படுத்துவது ஆபத்தில் தான் முடியும் என்கிறார்.
AI கருவிகள் குறிப்பாக Claude Code போன்ற மேம்பட்ட AI மாடல்கள், சாஃப்ட்வேர் தயாரிப்பு முறையை துரிதப்படுத்தினாலும், மறுபுறம் இன்ஜினியர்கள் தங்கள் சொந்த சிந்தனை திறனை, கோடிங் மீதான பிடியை மற்றும் அடிப்படைக் அறிவை இழந்து வருகிறார்கள் என்ற அச்சம் இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. வெறுமனே தயாரிப்புகளை அவசரப்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக மாறும்போது, அது எதிர்காலத்தில் பெரிய தொழில்நுட்ப சவால்களுக்கும் ஆபத்துகளுக்கும் வழிவகுக்கும் என டெக் ஊழியர்கள் பலரும் கூறுகின்றனர்.

