மலாக்கா மாநிலச் சட்டமன்றம் நாளை கலைக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இது அடுத்த 60 நாட்களுக்குள் 16-வது மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுக்கும்.
மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு மலாக்கா மாநில ஆளுநர் அலி ருஸ்தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் அப் ரவூப் யூசோவ் தெரிவித்தார்.
ரவூப்பின் இந்த அறிவிப்பு, அடுத்த மாநிலத் தேர்தல் குறித்து வாரக்கணக்கில் நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-fmt
