• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்!

வளைகுடா நாடுகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஈரானில் ஏற்கனவே உள்ள அமெரிக்கர்கள் அந்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய பயண எச்சரிக்கை அமெரிக்கர்களை தாண்டி ஈரான் மற்றும் வளைகுடாவில் இருக்கும் உலகளாவிய மக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். காரணம் அமெரிக்கா மீண்டும் தாக்குதலை துவங்கினால் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என நேற்று ஈரான் தரப்பில் பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்!

இந்த நிலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் வளைகுடாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க கட்டமைப்புகள், அமெரிக்க நிறுவனங்கள் இருக்கும் பகுதி என எவ்விதமான தளர்வுமின்றி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் ஈரானுக்கான விர்ச்சுவல் தூதரகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையில் ஈரானுக்கு “எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்ய வேண்டாம், ஈரானில் தற்போது அமெரிக்கர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சவுதி அரேபியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதிகளுக்கு எதிரான புதிய ராணுவ தாக்குதலில் சவுதி, யெமன் படைகள் உடன் அமெரிக்காவும் இணைய வேண்டும் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) டிரம்பிடம் பல முறை வலியுறுத்தினாலும், தொடர்ந்து மறுத்து வந்தார். ஹவுதிக்கள் கிழக்கு – மேற்கு பைப்லைன்-ஐ தாக்கிய பின்பு டிரம்ப் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வியாழக்கிழமை மீண்டும் முகமது பின் சல்மான் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசினார்.

இதன் பின்பு தான் கேம் டேவிட் கூட்டம் நடந்தது. இதையடுத்து டிரம்ப் ஹவுதிகள் மீது வான்வழித் தாக்குதலுக்குத் தயாராகுமாறு பென்டகனுக்கு உத்தரவிட்டார். திங்கட்கிழமை காலையில் ஈரான் மீதும், ஹவுதி படைகள் மீதும் பெரும் தாக்குதல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது, பைட்டர் விமானத்தில் ஏவுகணைகள் கூட லோடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

ஆனால் தாக்குதல் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டிரம்ப் தாக்குதலை திடீரென நிறுத்தினார். இதுகுறித்து New York Times வெளியிட்டுள்ள தகவலில், ஹவுதிகளுக்கு எதிரான சவுதி அரேபியாவின் போரில் அமெரிக்கா இணைவது குறித்து டிரம்ப் கடந்த 2 வாரங்களாக முடிவெடுக்காமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் முடிவு எடுக்கப்பட்டும் டிரம்ப் பின்வாங்கியுள்ளார்.

ஏற்கனவே ஈரான் உடனான போரில் அமெரிக்க பாதுகாப்பு படைகளும், ஏவுகணை இருப்பும் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து இருக்கும் வேளையில் ஹவுதிக்கள் உடன் போரை துவங்கினால் இது அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்குமா என்பது பெரும் சந்தேகம்.

இதனாலேயே ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில் டிரம்ப் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்.

Share This Article

English summary

US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes — ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்!

Story first published: Monday, September 21, 2026, 15:20 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு…

Next Post

ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai

Next Post
ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai

ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin