• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“மகளிர் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்!” – ஸ்மிருதி மந்தனாவிற்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா புகழாரம்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“மகளிர் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்!” – ஸ்மிருதி மந்தனாவிற்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா புகழாரம்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 9:17 PM IST

2013-இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் உலகின் முன்னணி பேட்டராக உருவெடுத்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற வரலாற்றுப் சாதனையைப் படைத்துள்ள இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவர் ஜெய் ஷா தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக விளையாடிய போது ஸ்மிருதி மந்தனா இந்த சாதனையை ஏற்படுத்தினார். இப்போட்டியில் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசிய அவர், நியூசிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் சுசி பேட்ஸின் சாதனையை முறியடித்தார்.

சுசி பேட்ஸ் 171 இன்னிங்ஸ்களில் எடுத்திருந்த ரன்களைக் கடந்து, தற்போது 4,788 ரன்களுடன் மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்போட்டிக்கு முன்பாக இச்சாதனையை எட்ட அவருக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்த மைல்கல்லை எட்டினார்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் ஜெய் ஷா, “மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனாவிற்கு வாழ்த்துகள். வரலாற்றுச் சாதனைகளை மாற்றி அமைப்பதன் மூலம், நீங்கள் மகளிர் கிரிக்கெட்டைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதுடன், இளம் வீராங்கனைகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறீர்கள்” எனப் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில், ஹாங்காங் அணிக்கு எதிராக 124 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை (10,868 ரன்கள்) முறியடித்து, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றிருந்தார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18-வது சதத்தைப் பதிவு செய்து, ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்கின் சாதனையை முறியடித்து அதிக சதங்கள் அடித்த வீராங்கனையாக உருவெடுத்தார்.

2013-இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் உலகின் முன்னணி பேட்டராக உருவெடுத்துள்ளார். தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும், டி20 தரவரிசையில் 5-வது இடத்திலும் அவர் நீடிக்கிறார்.

Read More

Previous Post

ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா? மேற்காசியாவில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் | Iran says US preparing to launch fresh military action against Tehran

Next Post

Post Office | போஸ்ட் ஆபிஸ் RD-ல் மனைவி பெயரில் ரூ.8,000 முதலீடு; எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | போஸ்ட் ஆபிஸ் RD-ல் மனைவி பெயரில் ரூ.8,000 முதலீடு; எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Post Office | போஸ்ட் ஆபிஸ் RD-ல் மனைவி பெயரில் ரூ.8,000 முதலீடு; எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin