
இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் நேற்று மாலை வேளையில் அந்த வீட்டுக்குச் சென்றபோது, தாய் இரத்தக் காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அதே வீட்டின் மற்றொரு அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

