வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும். இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது. அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.



