உதாரணமாகா, என்பிஎஸ் திட்டத்தில், அரசு ஊழியர் ஒருவர் கூடுதலாகச் சில ஆண்டுகள் பணியாற்றும்போது, சந்தையில் உள்ள அவரது தனிப்பட்ட முதலீடு தொடர்ந்து வளரும். இதனால் அவர் ஓய்வுபெறும்போது, அவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை நேரடியாக அதிகரிக்கும். எனவே, இதில் ஊழியர்களுக்கே கூடுதல் பலன். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், அரசு ஊழியர் ஒருவர் எத்தனை ஆண்டுகாலம் பணியில் இருந்தாலும், கடைசியாக அவர் வாங்கிய சம்பளத்தில் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே ஓய்வூதியமாகத் தரப்படும். எனவே, ஊழியர் கூடுதல் ஆண்டுகள் வேலை பார்த்து அதிகப் பணத்தைச் செலுத்தினாலும், அவருக்குக் கூடுதல் பென்ஷன் கிடைக்காது. மாறாக, ஓய்வூதியம் வழங்க அரசு தன் கையிலிருந்து செலவழிக்க வேண்டிய தொகை பெருமளவு குறையும். எனவே, இதில் அரசுக்கே லாபம் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


